Home> Social
Advertisement

US: பாலியல் தொந்தரவு அச்சத்தால் நடுங்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் Video

பாலியல் வன்கொடுமை என்பது உலகம் முழுவதும் நிகழ்கிறது. தினசரி இதுபோன்ற பல கொடுமைகளை கேட்டு வந்தாலும், நாடாளுமன்ற பிரதிநிதி ஒருவருக்கு அதிலும் அமெரிக்காவில் இப்படியும் நடக்குமா என்று அதிர்ச்சி ஏற்படுகிறது. மனிதர்கள் எங்கிருந்தாலும், குணம் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கிறது அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் என்பவருக்கு நிகழ்ந்த அனுபவம்.

US: பாலியல் தொந்தரவு அச்சத்தால் நடுங்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் Video

பாலியல் வன்கொடுமை என்பது உலகம் முழுவதும் நிகழ்கிறது. தினசரி இதுபோன்ற பல கொடுமைகளை கேட்டு வந்தாலும், நாடாளுமன்ற பிரதிநிதி ஒருவருக்கு அதிலும் அமெரிக்காவில் இப்படியும் நடக்குமா என்று அதிர்ச்சி ஏற்படுகிறது. மனிதர்கள் எங்கிருந்தாலும், குணம் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கிறது அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் என்பவருக்கு நிகழ்ந்த அனுபவம்.

தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை அச்சத்தைப் பற்றி அவர் சமூக ஊடகம் ஒன்றி வெளிப்படையாக பேசினார். அது வைரல் ஆகிறது என்பது மட்டுமல்ல, விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த டிசம்பரில் அமெரிக்காவின் கேபிடல் வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை கலவரத்திற்குப் பிறகு தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்ட அவர் பாலியல் தாக்குதலில் இருந்து தப்பியதாக தெரிவித்தார்.  

ஒரு இன்ஸ்டாகிராம் நேரடி உரையாடலில் பேசிய கோர்டெஸ் இதனை தெரிவித்தார். “இந்த தருணத்தில் நான் உணர்ச்சிவசப்படுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? இது ஒரு பெரிய விஷயமல்ல, என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிட வேண்டும் என்று சொல்கின்றனர், இவை துஷ்பிரயோகம் செய்பவர்களின் தந்திரங்கள்" என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர், "பாலியல் தாக்குதலில் இருந்து தப்பினேன்" என்றும் தெரிவித்தார்.  

Also Read | மக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்ப தயாராகிறது Elon Musk-ன் SpaceX

கேபிடல் வளாகத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஐந்து பேர் இறந்தனர், காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார், அன்றைய அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவான கூட்டம், கேபிடல் கட்டிடத்தை நோக்கி வந்தது, கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினரையும்  தாக்கியது.

"என் வாழ்க்கையில் இதை என்னால் மறக்கவே முடியாது" என்று கோர்டெஸ் கூறுகிறார், "நாம் அதிர்ச்சியால் உறைந்துபோகும் போது, பல்வேறு அச்சங்கள் ஒன்றாக சேர்ந்துவிடுகிறது. பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? துஷ்பிரயோகம் செய்யும் சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது அதிர்ச்சியாக இருந்தது, ஒருவன் நான் இருந்த அறைக்கு வெளியே நின்று வெளியே வா, வெளியே வா என்று கத்துகிறான், நிலைமையும் மோசமாக இருக்கிறது. இது நான்கு விநாடியோ, இல்லை ஐந்து விநாடி மட்டுமே மனதில் ஏற்பட்ட அச்சமாக இருந்தாலும் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாத அழுத்தத்தை நான் கேபிடல் கட்டடத்தில் இருந்தபோது அனுபவித்தேன்” என்று தெரிவித்தார்.

Also Read | History Feb 02: விக்டோரியா மகாராணியின் இறுதிச்சடங்கு, இடி அமீன் அதிபரானார்… 

குடியரசுக் கட்சியின் ஜான் கம்மிங்ஸுக்கு எதிராக போட்டியிட்டு அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் வெற்றி பெற்றார்.  தான் இறந்துவிடுவோம் என்று அந்த சமயத்தில் அதிர்ச்சி ஏற்பட்டதாக கூறும், அலெக்ஸாண்ட்ரியா, “நான் குளியலறைக்குள் சென்றிருக்கக்கூடாது கழிவறைக்கு சென்றிருக்க வேண்டும். வன்முறையாளர்கள் என் அலுவலகத்திற்குள் வந்தனர். அவள் எங்கே எங்கே என்று கத்தியதையும் கேட்டு பயப்பட்டேன், "என்று கூறினார்

"வெளியில் நடப்பதை பார்க்க முடியுமா என்று பார்க்க கதவு சந்து வழியாக பார்த்தேன். ஒரு வெள்ளை மனிதன் கருப்பு நிற தொப்பி அணிந்திருந்தான், கதவைத் திற என்று கத்தினான், நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன், அந்த சில நிமிடங்களில் என் மனதில் எழுந்த உணர்வுகள் அனைத்தையும் வார்த்தைகளாக சொல்லிவிட முடியாது இனி என் முழு வாழ்க்கையிலும் நான் ஒருபோதும் அந்த சம்பவத்தை மறந்துவிட முடியாது"என்று அவர் கூறினார்.
அந்த ஆணின் முகத்தில் இருந்த வெறுப்பும், வெளியே வா, வெளியே வா என்ற கத்தலும் என்னால் மறக்க முடியாது என்று அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர் கூறிய வீடியோ வைரலாகிறது.

ALSO READ: Elon Musk: உலகின் No.1 பணக்காரரைப் பற்றிய 10 சுவாரசியமான விஷயங்கள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More