Home> Social
Advertisement

'சர்கார்' படத்திற்கு மட்டும் தான் ப்ரமோஷனா?... LKG-க்கு...

RJ பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் LKG திரைப்படம் வரும் பொங்களுக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

'சர்கார்' படத்திற்கு மட்டும் தான் ப்ரமோஷனா?... LKG-க்கு...

RJ பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் LKG திரைப்படம் வரும் பொங்களுக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

சமீப காலமாக தனது ட்விட்டர் வாயிலாகவும், நேரடியாகவும் சமூக பிரச்சணைகள் குறித்து குரல் கொடுத்து வருபவர் RJ  பாலாஜி. இவர் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார்போல் அரசியல் தலைவரை போல் RJ பாலாஜி காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த பரபரப்பிற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் தனது அரசியல் வரவினை குறித்து தெரிவித்தார். அதாவது.. "ஆம், நான் அரசியலுக்கு வருகிறேன் திரைப்படத்தின் வாயிலாக" என குறிப்பிட்டிருந்தார்.

LKG என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை தானே எழுதி நடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இப்படத்தில் சர்சையான கருத்துகளுக்கு பெயர் போன நாஞ்சில் சம்பத் அவர்கள் RJ பாலாஜிக்கு தந்தையாக நடிப்பதாகவும், நடிகை பிரியா ஆனந்த முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படம் வரும் பொங்கள் தினத்தன்று திரைக்கு வரும் என அவர் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். சர்கார் திரைப்படத்திற்கு இலவச புரமோசன் செய்த அரசு இலவச பொருட்கள் இந்த புகைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த புகைப்படங்களுக்கு இதுவரை புரமோசன் கிடைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது... 

மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் நகைச்சுவை வாயிலாக நாட்டின் நடப்பினை எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More