Home> Social
Advertisement

இந்த ஆண்டு வெங்காயத்தின் விலை உங்களை அழ வைக்காது: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்!!

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெங்காயத்தின் விலை மிக அதிகமாக உயர்வதை நாம் காண்கிறோம்.

இந்த ஆண்டு வெங்காயத்தின் விலை உங்களை அழ வைக்காது: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்!!

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெங்காயத்தின் விலை ((Onion Prices) மிக அதிகமாக உயர்வதை நாம் காண்கிறோம். பல ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் அனைத்தையும் மீறி வெங்காயம் சாமானியர்களை அழ வைக்கிறது. இவ்வாண்டு அவ்வாறு நிகழாமல் இருக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, வெங்காயத்தின் விலை நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் என்ற அளவை எட்டியது. வெங்காயத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பயிர் விரயம் மற்றும் மகசூல் இல்லாதது. இந்த இரண்டு விஷயங்களால், சந்தைகளில் வழங்கல் குறைந்து விலைகள் உயரும்.

அதிகப்படியான மழை பெய்தால் பயிர் கெட்டுப்போகும். மழை குறைவாக இருந்தாலோ, விளைச்சல் சரியாக இருக்காது. இதுபோன்ற சமயங்களில், வெங்காயத்தின் பற்றாக்குறையை சமாளிக்க, அரசாங்கம் இடையக இருப்பை சேமிக்கிறது. இருப்பினும், கடந்த ஆண்டு அரசாங்கத்தின் சேமிப்பும் போதாமல் போனது. இந்த முறை அரசாங்கம் இதற்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளது.  இதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயரும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) ஏற்கனவே ஒரு பெரிய வெங்காயக் கிடங்கைத் தயார் செய்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் NAFED விவசாயிகளிடமிருந்து தற்போதைய விகிதத்தில் வெங்காயத்தை நேரடியாக வாங்கியுள்ளது. மொத்தம் 95,000 டன் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்தின் சார்பில் NAFED வாங்கியுள்ளது. ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு, 2018-19 ராபி பயிரில் 57,000 டன் வெங்காயத்தை அரசாங்கத்தின் சார்பில் NAFED வாங்கியது. ஆனால் அது போதாததால், அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை வாங்க வேண்டியிருந்தது. தற்போது, 1 லட்சம் டன் வெங்காயத்தை வாங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது விவசாயிகளிடமிருந்து இன்னும் அதிக வெங்காயம் வாங்கப்படும்.

அடுத்த 2-4 நாட்களில் 1 லட்சம் டன் வெங்காயம் வாங்கும் இலக்கு நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அறிக்கையின்படி, இடையக பங்குக்காக 95,000 டன் வெங்காயம் வாங்கப்பட்டுள்ளதாக NAFED இன் கூடுதல் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.சிங் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு-மூன்று நாட்களில் 1 லட்சம் டன் வெங்காயம் வாங்குவதற்கான இலக்கு நிறைவடையும். ராபி பயிராக விளையும் வெங்காயத்தை சேகரித்து வைப்பது சாத்தியமான விஷயமாகும்.  உண்மையில், ராபி பயிரின் (Rabi crop) வெங்காயம் காரீப் பயிரை விட நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்கும்.

ALSO READ: மும்பை கனமழையின் கோரதாண்டவம்: வீடுகள், கடைகள் மற்றும் மருத்துவமனைகளில் நுழைந்த தண்ணீர்

தற்போதைய சந்தை விகிதத்தில் மகாராஷ்டிரா விவசாயிகளிடமிருந்து NAFED சுமார் 86,000 டன் வெங்காயத்தை வாங்கியுள்ளது. இந்த முறை மகாராஷ்டிராவிலிருந்து 80,000 டன் வாங்க இலக்கு இருந்தது. ஆனால் NAFED அதை விட அதிக வெங்காயத்தை வாங்கியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து 1 லட்சம் டன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

Read More