Home> Social
Advertisement

Video Viral: என்னம்மா இப்படி பண்றீங்களே! வயசுப் பொண்ணு செய்யற வேலையா இது? வீடியோ வைரல்

Hair Freeze Video: சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. மைனஸ் 30 டிகிரி குளிரில் இப்படி செய்யலாமா என்று பலரும் விமர்சிக்கும் வைரல் வீடியோ....  

Video Viral: என்னம்மா இப்படி பண்றீங்களே! வயசுப் பொண்ணு செய்யற வேலையா இது? வீடியோ வைரல்

Freezing Cold Video: உடலை சில்லிட வைக்கும் பல வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கலாம் அல்லது பயந்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற ஒரு வீடியோவை பார்த்திருக்க முடியாது. குளிர்காலம் உச்சத்தில் இருக்கும் நிலையில் அண்மையில் மனதையும் உடலையும் உறைய வைக்கும் வைரல் வீடியோ ஒன்று இன்ஸ்ட்ராகிராமில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது ஆச்சரியப்படுத்துவதாக இருந்தாலும், ‘என்ன கொடுமை மேடம் இது?” என்ற கேள்வியையும் கேட்க வைக்கிறது.

-30 டிகிரி வெப்பம் இருக்கும் வடக்கு ஸ்வீடனில் ஒரு பெண் செய்த வேலை அப்படி! சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. மைனஸ் 30 டிகிரி குளிர் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள்! அந்தக் குளிரில் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் குளிர் காரணமாக தலைமுடி உறைந்து போகும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வெளியே சென்றால், மயிர்கால்கள் சில்லிட்டுப் போகும் என்பது தெரிந்தாலும், அதை நேரடியாக பார்த்தால், அச்சம் ஏற்படுகிறது. இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

உறைந்து போன தலைமுடி

ஸ்வீடனில் எவ்வளவு குளிராக இருக்கிறது என்பதைக் காட்டும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இப்படி விளையாட்டுத்தனமாக செய்யும் வீடியோக்கள், அந்தப் பெண்ணின் உடல்நிலையை பாதிக்கும் என்று பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், ஸ்வீடனில் வெப்பநிலை எலும்பையும் உறைய வைக்கும் அளவிற்கு நிலவும் கடும் குளிரில் வெளியே சென்ற சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் (Social Media Influencer) அந்த வித்தியாசமான அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துக் கொள்வதற்காக இந்த ரிஸ்க் எடுத்துள்ளார். 

மேலும் படிக்க | ரயிலில் தூங்க தூளி கட்டி பல்பு வாங்கிய தில்லாலங்கடி: வீடியோ வைரல்

எல்விரா லண்ட்கிரென் என்ற அந்த இளம்பெண், -30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தனது தலைமுடியை உறைய வைத்து வானிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை காட்டினார். இந்த உறைய வைக்கும் வீடியோவை, இதுவரை லட்சக்கணக்கானவர்கள் பார்த்தார்கள் என்றால், அதில் பெரும்பாலானவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.   

அந்த வீடியோவில் உறைபனி வெப்பநிலையில் லண்ட்கிரென் நிற்கிறார். தலைமுடியை விரித்துள்ள அவர், அது குளிரில் உறைந்திருப்பதைக் காட்டுகிறார். வடக்கு ஸ்வீடனில் இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.   

லண்ட்கிரெனின் வீடியோ இன்ஸ்டாகிராமில் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டதிலிருந்து 10 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கருத்துகள் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | காதலுக்காக என்ன செய்யலாம்? 2000 கோடி ரூபாயை வேண்டாம் என்று சொன்ன காதலி!

இதைப் பார்த்தால்  உங்களுக்கு என்ன தோன்றுகிறது? "சளி பிடிக்கும்" என்று ஒருவர் எழுதினால், மற்றொருவரோ,  "உங்கள் நோயெதிர்ப்பு சக்தியில் 1% எனக்கு இருந்தால் கூட போதும்" என்று வருத்தப்படுகிரார். இன்னொருவரோ, "நான் அதை ஒரு முறை செய்தேன், மீண்டும் ஒருபோதும் செய்தேன், ஆனால், மோசமான பாடம் கற்றுக்கொண்டேன்" என்று தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார்.

மற்றொருவருக்கோ "கடவுளே, என் இதயம் நின்றுவிட்டது, உங்கள் தலைமுடி இனி என்ன ஆகும், அப்படியே கொட்டிப் போய்விடுமே?" என்று கவலைப்படுகிறார். என்ன கொடுமை மேடம் இது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி.  இந்த  கட்டுரை மற்றும் வீடியோ, இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | சிறுநீரில் காணப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் இவைதான்: ஜாக்கிரதை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More