Home> Social
Advertisement

KFC உணவில் கோழியின் முழு தலை! நான் தலைக்கறி ஆர்டர் பண்ணலையே!!

உணவுப் பிரியர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்த கேஎஃப்சியின் ஹோம் ஃபுட் டெலிவரி...

KFC உணவில் கோழியின் முழு தலை! நான் தலைக்கறி ஆர்டர் பண்ணலையே!!

லண்டனில் கேஎஃப்சியில் சிக்கன் ஆர்டர் செய்திருந்த பெண் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்யப்பட்டபோது, அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

KFC வாடிக்கையாளரான அந்தப் பெண், தனக்கு டெலிவரி செய்யப்பட்ட ஹாட் விங்ஸ் உணவில் முழு கோழித் தலை இருந்ததைக் கண்டு அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை! ஒவ்வொரு உணவுப் பிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான செய்தி இது. 

ஜஸ்ட் ஈட் (Just Eat)இல், இரண்டு நட்சத்திர மதிப்பைக் கொடுத்த அந்தப் பெண்,  “எனது சூடான விங்ஸ் உணவில் கோழியின் வறுபட்ட தலை இருந்ததைக் கண்டேன். உடனே உணவை தூக்கி வீசிவிட்டேன் ” என்று எழுதியுள்ளார். இந்த செய்தியை அவர், @takeawaytrauma என்ற இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார்.

ஊடக அறிக்கைகளின்படி, கேப்ரியல் என்ற KFC வாடிக்கையாளர், தென்கிழக்கு லண்டனின் Twickenham இல் அமைந்துள்ள KFC Feltham இலிருந்து ஹாட் விங்ஸ் ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. 

அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் கோழியில் தலை இருந்தது (Food Delivery) இங்கிலாந்து சமூக ஊடகங்களில் பரவலாக அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையான கோழிக்கறியை வழங்குவதாக கூறும் கே.எஃப்.சி, "எங்கள் உணவகங்களில் அனைத்தையும் புதிதாகத் தயாரிக்கிறோம்" என்றும் கூறுகிறது.

சப்ளையர்கள், கூட்டாளர்கள் மற்றும் குழுக்களுடன் தாங்கள் வைத்திருக்கும் கடுமையான செயல்முறைகள் மற்றும் கண்காணிப்பில் சிறிய தவறு ஏற்பட்டிருப்பதை இது தெளிவாக காட்டுகிறது என்றும்ம் கே.எஃப்.சி ஒப்புக்கொண்டது.

Read Also | உடலுக்கு குளுமை தருவது பீரா? மோரா?

இந்த சம்பவத்திற்கு பிறகும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் கேப்ரியல் இரண்டு நட்சத்திரம் கொடுத்திருப்பது அவரது தாராள உள்ளத்தை காடுவதாக நன்றி தெரிவித்திருக்கும் பிரபல உணவுச் சங்கிலி நிறுவனமான KFC, அவரை தொடர்பு கொண்டதாகவும் கூறுகிறது.

அவரையும் அவரது குடும்பத்தினரையும், தங்கள் ரெஸ்டாரண்டுக்கு வந்து சமையலறைக் குழுவினரை சந்திக்கும்படி அழைப்பு விடுத்திருப்பதாகவும், மீண்டும் தங்களிடம் ஆர்டர் செய்வார்கள் என்றும் கே.எஃப்.சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கொடுக்கும் எதிர்வினைகளும், பதில்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோழி உண்மையானது என்று நிரூபித்துவிட்டதாக ஒருவர் கூறுகிறார்.

இரண்டு நட்சத்திர பாராட்டை பெறுவதற்கு சிக்கன் தலை போதும் என்றால், ஒரு நட்சத்திரத்தைப் பெறுவதற்கு துரித உணவு சங்கிலி நிறுவனம் இன்னும் என்ன தவறு செய்ய வேண்டும் என்று நக்கல் அடிக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள மற்றொருவர், ஒருவேளை சாப்பிடுபவரை கோழி கடித்திருந்தால், ஒரு நட்சத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும்! என்று நையாண்டி செய்கிறார்.

Also Read | Weight Loss: உடல் பருமனை குறைக்கும் ‘3’ மேஜிக் பானங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More