Home> Social
Advertisement

நீ நடிகன்டா! தூங்குவதாக நடித்து நாய்க்குட்டி செய்யும் சேட்டை!

நாய்க்குட்டி ஒன்று அதன் உரிமையாளர் இல்லாதபோது அதன் தனியறையில் செய்யும் குறும்புத்தனங்கள் இணையத்தில் பகிரப்பட்டு பல லைக்குகளை பெற்று வருகிறது.  

நீ நடிகன்டா! தூங்குவதாக நடித்து நாய்க்குட்டி செய்யும் சேட்டை!

நாம் கூட்டத்தோடு இருக்கும்போது நம்மிடம் இருந்து வெளிப்படும் செயல்களை காட்டிலும் நாம் தனியாக இருக்கும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.  தனிமையில் இருக்கும்பொழுது தான் நமது முழு செயல்பாடும் வெளிப்படுகிறது என்று சில கூற்றுகள் தெரிவிக்கிறது.  சிலர் தனியாக இருக்கும்போது பாடல் கேட்பது, ஆடுவது, அமைதியாக தூங்குவது அல்லது எதாவது வித்தியசமான முயற்சியை மேற்கொள்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை செய்வோம்.  மனிதர்கள் தனிமையில் சில செயல்களை செய்வதைப் போன்றே நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய வளர்ப்பு பிராணிகளும் தனியாக இருக்கும்போது சில சேட்டைகளை செய்கிறது.  தற்போது நாய்க்குட்டி ஒன்று அதன் உரிமையாளரிடம் தூங்குவது போல் நடித்துவிட்டு அவர் போன பின்னர் தனியாக இருக்கும்போது செய்யும் குறும்புத்தனங்கள் சில இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

இந்த வீடியோ யோக் என்கிற ட்விட்டர் கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், நாய் ஒன்றை அதன் உரிமையாளர் அதன் அறையில் படுக்கவைத்து விட்டு கதவை பூட்டிவிட்டு வெளியே வருகிறார்.  அந்த நாய்க்குட்டி அதன் உரிமையலர் இருக்கும்வரை தூங்குவது போல் நடித்துக்கொண்டு இருந்துவிட்டு அவர் போனதும் அந்த நாய்க்குட்டி தன்னுடைய குறும்புத்தனமான வேலைகளை செய்ய தொடங்கிவிடுகிறது.  அந்த நாய்க்குட்டி வேகமாக எழுந்து மெத்தையின் மீது பெட்ஷீட்டை இழுத்து விரித்து வைத்துவிட்டு, டிராவில் எதையோ தேடுகிறது.  அதன்பிறகு கீழே குதித்து டேபிள் மீது ஏறி லைட்டை அணைத்துவிட்டு மீண்டும் வந்து பெட்டில் படுத்துக்கொள்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

 

இதனை பார்க்கும்பொழுது தாய், குழந்தையை தூங்க வைத்த பிறகு அவை செய்யும் குறும்பு போல இருக்கிறது.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை தொண்ணூற்று நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இணையாவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு ஐயாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கமெண்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | Viral News: 8 மனைவிகளுக்கும் ஒரு அரண்மனை; டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More