Home> Social
Advertisement

பஞ்சி ஜம்பிங்கில் அந்தரத்தில் அறுந்த கயிறு: பீதியை கிளப்பும் வைரல் விடியோ

Scary Viral Video: உங்கள் இதயம பலவீனமான இதயமாக இருந்தால் இந்த வீடியோவை பார்க்காதீர்கள். மனதை பதற வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

பஞ்சி ஜம்பிங்கில் அந்தரத்தில் அறுந்த கயிறு: பீதியை கிளப்பும் வைரல் விடியோ

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

இந்நாட்களில் இளைஞர்கள் பல வித சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் காண முடிகின்றது. இவற்றின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. ஆனால், இவற்றை பார்த்தால் நம்மால் அச்சப்படாமல் இருக்க முடிவதில்லை. இப்படிப்பட்ட செயல்களை பார்த்தால், நமக்கு வியர்த்துக்கொட்டும். 

பஞ்சி ஜம்பிங் என்பது சமீப காலங்களில் உற்சாகமான மற்றும் சிலிர்ப்பூட்டும் விளையாட்டாக மாறியுள்ளது. இதன் மூலம் அனைவரும் ஒரு வித த்ரில்லை அனுபவிக்க விரும்புகிறார்கள். நமது சாகசத்தின் ஆர்வத்தை பூர்த்தி செய்வதோடு, பஞ்சி ஜம்பிங்கில் பல வகையான ஆபத்துகளும் உள்ளன.

பொதுவாக, பஞ்சி ஜம்பிங் செய்யும் போது, ​​பாதுகாப்புக் கவசத்தை அணிந்த பிறகு, மலைகளில் இருந்தோ அல்லது நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் இருந்தோ மக்கள் அதிக உயரத்தில் இருந்து இறக்கிவிடப்படுகின்றனர். இதைப் பார்ப்பவர்களின் மனம் பதபதைக்கத்தான் செய்கிறது. தற்போது, ​​பஞ்சி ஜம்பிங்கின் போது பல வித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. பஞ்சி ஜம்பிங்கின் போது பாதுகாப்புக் கவசம் இருப்பதால் எந்த விதமான காயமும் ஏற்படுவதில்லை. மறுபுறம், பஞ்சி ஜம்பிங் செய்பவரின் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது கயிறு பழையதாக இருந்தாலோ, விபத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | இது உனக்கு தேவையா.. முள்ளம்பன்றியை விழுங்கி அவதிப்பட்ட ராட்சத பாம்பு: வீடியோ வைரல்

பஞ்சி ஜம்பிங் போது விபத்து

சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோவில், பஞ்சி ஜம்பிங்கின் ஒரு காட்சியைதான் காண்கிறோம். இதில் பெண் ஒருவர் பஞ்சி ஜம்பிங் மூலம் ஆற்றின் பல அடி உயரத்தில் இருந்து குதிப்பதையும், திடீரென கயிறு அறுந்து ஆற்றில் அவர் விழுந்ததையும் நாம் வீடியோவில் காண முடிகின்றது. இதைப் பார்த்து பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல தளங்களில் வெளியாகி வருகிறது. இது சிசிடிவி இடியட்ஸ் என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

வீடியோ 9 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது

வீடியோவில் உள்ள பெண், லான்சிங் பேடின் ஓரத்தில் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்து கொண்டு குதிக்கத் தயாராகி வருவதைக் காண முடிகின்றது. அவர் கீழே குதிக்கிறார், ஆனால், அவரது கயிறு இழுக்கப்பட்டவுடம் அது திடீரென அறுந்து, பெண் நேராக ஆற்றில் விழுந்தார். இந்த விபத்தினால், அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில் பெறப்பட்ட கருத்துகளின்படி, சில பயனர்கள் பெண் விபத்தில் இருந்து தப்பியதாகக் கூறுகின்றனர். தற்போது, ​​செய்தி எழுதும் வரை, சமூக வலைதளங்களில் இந்த வீடியோவுக்கு 9 மில்லியனுக்கும் அதிகமான, சுமார் 90 லட்சம் வியூஸ்கள் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து  வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | புதர்களுக்குள் மறைந்திருந்த புலி.. மானை திடீரென தாக்கிய வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More