Home> Social
Advertisement

மின்னல் வேகத்தில் தந்தூரி ரொட்டி: கலக்கும் இளைஞன், பாராட்டும் நெட்டிசன்ஸ்

Rare Viral Video: வேகம் என்றால் அப்படி ஒரு வேகம் என அனைவரையும் ஒரு இளைஞன் புகழ வைத்துள்ளார். அவரது வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. 

மின்னல் வேகத்தில் தந்தூரி ரொட்டி: கலக்கும் இளைஞன், பாராட்டும் நெட்டிசன்ஸ்

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

ஒருபுறம், நம் நாட்டில் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடி அலைகிறார்கள். அதே நேரத்தில், சில நபர்களின் திறமையை பார்த்து பலர் அவர்களை வேலையில் அமர்ந்த ஆவலை வெளிப்படுத்துகிறார்கள். சில வித்தியாசமான திறமைகள் கொண்ட நபர்களின் வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

அப்படிப்பட்ட வித்தியாசமான திறன் படைத்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதில் இரும்பு உலை போல் எரிந்து கொண்டிருக்கும் தந்தூரில் மின்சாரத்தின் வேகத்தை விட வேகமாக சப்பாத்தி செய்யும் ஒரு இளைஞனின் திறமையை காண முடிகின்றது. 

சமூக வலைதளங்களில் எந்த வீடியோ வைரலாகும் என்பதை யூகிக்க முடியாது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது.  இதில் ஒரு இளைஞனின் வேலையின் வேகத்தை கண்டு உணவகங்கள் வைத்திருக்கும் அனைவரும் அவருக்கு வேலை கொடுத்து தங்கள் உணவகத்தில் தங்க வைக்க ஆசைப்படுகிறார்கள். வீடியோவில் காணப்படும் இளைஞன் சில நொடிகளில் தன் கைகளால் தந்தூரி ரொட்டிகளை செய்து தந்தூருக்குள் வைப்பதை வீடியோவில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க |  என்னதான் லவ் இருந்தாலும் இப்படியா!! மணமகன் செய்கையால் ஷாக் ஆன மணமகள், வைரல் வீடியோ

மின்னல் வேகத்தில் தந்தூரி ரொட்டி செய்யும் இணைஞனின் வீடியோவை இங்கே காணலாம்:

சமூக வலைதளங்களில் எந்த வீடியோ வைரலாகும் என்பதை யூகிக்க முடியாது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது. இதில் ஒரு இளைஞனின் வேலையின் வேகத்தை கண்டு உணவகங்கள் வைத்திருக்கும் அனைவரும் அவருக்கு வேலை கொடுத்து தங்கள் உணவகத்தில் தங்க வைக்க ஆசைப்படுகிறார்கள்.

மின்னல் வேகத்தில் தந்தூரி ரொட்டி

இந்த வைரலான வீடியோ hari_singh_panwar_uk என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ஒரு கருப்பு சட்டை அணிந்துள்ள இளைஞன் காணப்படுகிறார். ஒரு திருமண விழாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில், அவர்களின் ஆர்டரை பூர்த்தி செய்ய மின்னல் வேகத்தில் அவர் ரொட்டிகளை செய்துகொண்டிருப்பதை காண முடிகின்றது. ஆனால், அங்கிருந்த மக்களின் கவனம் தந்தூரி ரொட்டிக்கு பதிலாக அவர் பக்கம் செல்கிறது. அவரது வேகத்தை அனைவரும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 

வீடியோவைப் பார்க்கும் லட்சக்கணக்கான பயனர்களும் இளைஞனின் ரொட்டி செய்யும்  திறமையைக் கண்டு ஆச்சரியத்தில் உள்ளனர். 

பயனர்கள் வீடியோவை விரும்பினர்

தற்போது, ​​செய்தி எழுதும் வரை, சமூக வலைதளங்களில் இந்த வீடியோவுக்கு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும், ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒரு பயனர், 'அண்ணனின் வேகம் அற்புதம்' என்று எழுதியுள்ளார். மற்றொரு பயனர், 'எனது உணவகத்தில் இந்த இளைஞன் இருக்க வேண்டும்' என்று எழுதியுள்ளார். ‘உங்கள் வேகத்துக்கு ஒரு சல்யூட்’ என மற்றொரு பயனர் அவரை புகழ்ந்துள்ளார். 

மேலும் படிக்க |  எருமை மாட்டிடம் எகத்தாளம் பண்ணி நபருக்கு நேர்ந்த கதிய நீங்களே பாருங்க..! வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More