Home> Social
Advertisement

சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தின் நகைச்சுவை trailer வெளியானது!

'ராட்சசன்' திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “சிலுக்குவார்பட்டி சிங்கம்”. இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தின் நகைச்சுவை trailer வெளியானது!

'ராட்சசன்' திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “சிலுக்குவார்பட்டி சிங்கம்”. இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படம் உள்பட ஜகஜால கில்லாடி, காடன், வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் திரைப்படம், தனுஷ் தயாரிக்கும் திரைப்படம் என 5 திரைப்படங்கள் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகவுள்ளது. இதில் தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படம் வரும் டிசம்பர் 21-ஆம் நாள் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் விஷ்ணு மீண்டும் காவலராக வலம் வருகின்றார். விஷ்ணுவுக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கின்றார். இவர்களுடன் 'பிக் பாஸ்' ஓவியா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
 
இத்திரைப்படதினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வரும் டிசம்பர் 21-ஆம் நாள் தனுஷின் மாரி-2, ஜெயம் ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஜய்சேதுபதியின் சீதக்காதி ஆகிய திரைப்படங்களும் திரைக்கு வரும் நிலையில் சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படதிற்கு திரையரங்கம் பெறும் சவால் தற்போது உதயநிதி வசம் சென்றுள்ளது. வரும் பொங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள ரஜினியின் பேட்ட திரைப்பட வெளியிட்டு உரிமையினை ரெட் ஜெயின்ட் மூவிஸ் பெற்றுள்ள நிலையில், சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படதிற்கு போதிய திரையரங்கங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More