Home> Social
Advertisement

வெளியானது ஜீனியஸ் படத்தின் டிரெயிலர்!!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீனியஸ் படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.

வெளியானது ஜீனியஸ் படத்தின் டிரெயிலர்!!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்தப்படியாக வெளியாக உள்ள படம் ஜீனியஸ். இந்த படத்தில் புதியவர் ரோஷன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் பிரியா லால் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். 

குழந்தைகளை படி படி என்று கல்வியை மட்டும் திணிப்பதால் அவர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் ஜீனியஸ் படம் உருவாகி உள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தியாகு படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், அமுதேஷ்வர் வசனம் எழுதியுள்ளார். இதனை ‘சுதேசிவூட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் இந்த படத்தின் கதாநாயகன் ரோஷனே தயாரிக்கிறார்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர், சிங்கிள் டிராக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.

Read More