Home> Social
Advertisement

கல்யாண கலாட்டா வீடியோ வைரல்! க்யூட்டான நாய்க்குட்டி டான்ஸ் வீடியோ

திருமண விழாவில் நாயுடன் ஜோடி சேர்ந்து நடனமாடும் மணமக்கலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 

கல்யாண கலாட்டா வீடியோ வைரல்! க்யூட்டான நாய்க்குட்டி டான்ஸ் வீடியோ

Viral Video: கல்யாணத்தில் நடைபெறும் கலாட்டாக்களும் காமெடிகளும் கலகலப்பை ஊட்டுபவை. அதிலும் மணமக்கள் தொடர்பான விஷயங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

திருமண விழாவில் தங்கள் நாயுடன் ஜோடி சேர்ந்து நடனமாடும் தம்பதிகளின் வீடியோ  சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  

நாய்கள் நட்பானவை, நன்றியுணர்ச்சி கொண்டவை. அன்பும் கருணையும் நிறைந்தவை என்று சொல்லத் தேவையில்லை. நாய்களின் அபிமான கிளிப்புகள் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் விரும்பப்படும் விலங்கு வீடியோக்களாக (Animal Video) இருப்பதற்கு இதுவே காரணம்.

மேலும் படிக்க | மானை மடக்கிய மலைப்பாம்பு: கேமராவில் கைதான திக் திக் நிமிடங்கள் 

இது போன்ற ஒரு வீடியோ, நிச்சயமாக உங்களை சிரிக்க வைக்கும். ஒரு வளர்ப்பு நாய், தன்னை நேசிக்கும் மனிதர்களுடன் சேர்ந்து நடனமாடும் நிகழ்ச்சி மனதை கொள்ளைக் கொள்கிறது.  

வீடியோவில், எட் ஷீரனின் திங்கிங் அவுட் லவுட் என்ற பாடலுக்கு புதுமணத் தம்பதிகள் நடனமாடுகின்றனர். இவர்கள் நடனமாடும்போது, தங்கள் கைகளில் செல்லக்குட்டியை கொண்டு செல்கின்றனர்.

கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த செல்ல நாய்க்குட்டி (Dog the pet), தனது தலையை மணமகள் மீது வைத்து, முகத்தை நக்குகிறது, அதைத் தொடர்ந்து தம்பதிகள் தங்கள் இருவருக்கும் அன்பான செல்லத்தைக் கட்டி முத்தமிடுகிறார்கள்.

 

கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த ஸ்டெபானி மற்றும் கிரெக் சாபர்ஸ்கி ஜோடி, தக்கள் அபிமான கோல்டன் ரெட்ரீவர் நாய்க்குட்டியை 2020 இல் தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

மார்ச் 10 அன்று goldenretriever_lilly என்ற கணக்கின் மூலம் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடப்பட்டது, அதில் “இதுதான் எல்லாமே.” என்ற குறிப்பு எழுதப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | காட்டில் ஒரு ‘கணவன் - மனைவி’ சண்டை

“எங்களுடன் சேர முடிவு செய்தவர் பியர் என்னும் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்க்குட்டி. கிரெக்கும் நானும் வீட்டில் எப்போது கட்டிப்பிடித்தாலும் ​​எங்கள் மீது குதித்து, தன்னையும் கட்டிப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு நாங்கள் ஆடும் முதல் நடனத்தின் போதும் அதேதான் நடந்தது. 

பியர், கிரெக் மீது குதித்து எங்களுடன் சேர்ட்த்துக் கொள்ளும்படி கேட்டார். கிரெக் வழக்கம் போல் பியரைத் தூக்கி எங்களின் நடுவே வைத்தார். எங்களுடன் சேர்ந்து பியர் கட்டிப்பிடித்து நடனமாடினார்” என்று ஸ்டெபானி பதிவிட்டுள்ளார்.  

நாய்க்குட்டியின் நடன வீடியோ வைரலாகியுள்ளது, இனிமையான சிறிய குடும்பத்தை அனைவரும் வரவேற்கின்றனர். ஒரு நாயின் நிபந்தனையற்ற மாசுமருவற்ற அன்புக்கு மனிதர்கள் தகுதியற்றவர்கள் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.  

மேலும் படிக்க | ஜூஸ் உடன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா?

மற்றொருவர், ”மிகவும் விலைமதிப்பற்ற இதை விரும்புகிறேன். உன் தோளில் அவன் தலையை தடவிக் கொடுக்கும் அன்பு அற்புதமானது" என்று எழுதியுள்ளார்.
 
"பியர் எங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. ஒருசில நொடிகளில் நமது சாதாரணமான நாளையும் அழகாக்கிவிடுகிறது. எனவே நாயை சொந்தமாக வைத்திருக்கும் வாய்ப்பு இல்லாத மற்றவர்களுடன் இந்த அன்பான வீடியோவை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்" என்று ஸ்டெபானி கூறினார்.

மேலும் படிக்க | பாக் ஜலசந்தியை கடந்து சாதித்த 13 வயது மாற்றுத் திறனாளி சிறுமியின் சாதனை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More