Home> Social
Advertisement

பவன் கல்யாணி-ன் PSPK25 பெயர் வெளியானது!

பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய இத்திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்து இன்று காலை முதலே ட்விட்டரில் ட்ரண்ட் ஆகி வந்தது.

பவன் கல்யாணி-ன் PSPK25 பெயர் வெளியானது!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பவன் கல்யாணின் PSPK25 திரைப்படத்தின், பெயர் மற்றும் பர்ஸ்ட்லுக் வெளியானது!

பவன் கல்யாண் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "PSPK25 - அக்னதவாசி". இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் படத்தின் பெயரினை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

ரொமான்டிக் பானியில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் பவன் ஒரு ஐ.டி. துறை ஊழியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமு இம்மானுவேல் மற்றும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளனர். குஷ்பு சுந்தர், ஆடி பினிசெட் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய இத்திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்து இன்று காலை முதலே ட்விட்டரில் ட்ரண்ட் ஆகி வந்தது. 

இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தினை பூர்த்திசெய்ய, படக்குழுவினர் இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட்லுக் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது!

Read More