Home> Social
Advertisement

ராட்சத கொடூர மலைப்பாம்புகள் Vs அப்பாவி பிராணிகள்: திக் திக் வைரல் வீடியோ

இந்த வீடியோவில் ராட்சத கொடூர மலைப்பாம்பு பிற விலங்குகளை எப்படி வேட்டையாடி விழுங்குகிறது என்பதை நாம் காணலாம். இந்த வீடியோ முழுமையாக நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.

ராட்சத கொடூர மலைப்பாம்புகள் Vs அப்பாவி பிராணிகள்: திக் திக் வைரல் வீடியோ

மலைப்பாம்பு நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன. அதிலும் இந்திய மலைப் பாம்பு தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. 

இப்பாம்பின் நிறம் மஞ்சள் அல்லது கருமை கூடிய பழுப்பு கொண்டது வழவழப்பான செதிள்கள், பிரகாசமான தழும்புகளைக் கொண்டிருக்கும். இவை வாழும் நிலப்பரப்பு, வாழ்விடம் பொருத்து இதன் நிறம் சற்று மாறுபடும். மலை காடுகளில் காட்டாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், அசாம் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள பாம்புகளின் நிறம் கரிய நிறத்துடனும், தக்காண பீடபூமி, கிழக்கு கடற்கரை பகுதிகளில் வாழக்கூடிய இப்பாம்புகள் சற்று வெளிரிய நிறத்தில் இருக்கும். இவை மந்தமாக, மெதுவாக நகர்வது வழக்கம் கொண்டவை. மறைந்திருந்து அதிரடியாக தன் உணவை வேட்டையாடக்கூடியது. பிற பாம்புகள் போல வளைந்து வளைந்து நகராமல் நேராக நகரக்கூடியவை. இவை மிகச்சிறப்பாக நீருக்கடியில் நீந்தக்கூடியவை. தேவைப்பட்டால் பல நிமிடங்கள் நீரில் மூழ்கி இருக்கும். 

மேலும் படிக்க | King Cobra Attack: சுற்றுலா பயணிகள் மத்தியில் என்ட்ரியான ராஜநாகம்..! செம ஷாக் - வைரல் வீடியோ

அனைத்து பாம்புகள் போலவே, இந்திய மலைப்பாம்புகள் ஊணுண்ணிகள் ஆகும். இவைற்றின் உணவு பாலூட்டிகள், பறவைகள் போன்றவை முதன்மையானவையாகும். இரையை திடீர் என தாக்கிப் பிடித்து ஒன்று அல்லது இரண்டு சுற்றுசுற்றிவளைத்து இரையை மூச்சு விட இயலாமல் செய்து கொல்கிறது. பின்னர் முதலில் தலையில் இருந்து விழுங்குகிறது. பெரிய உணவை சாப்பிட்ட பிறகு மந்தமாக பல நாட்கள் அல்லது பல வாரங்கள் செரிமானத்துக்கு ஓய்வெடுத்துக்கொள்ளும். நன்கு சாப்பிட்டு பிடிபட்ட மலைப்பாம்பு ஒன்று இரண்டு ஆண்டுகள்வரை பட்டினி இருந்துள்ளதாக பதிவு உள்ளது. இதன் தாடை எலும்புகள் இணைக்கப்படாததால் மலைப்பாம்பு அதன் உடல் விட்டத்தை விட பெரிய இரையை விழுங்க முடியும். 

அந்த வகையில் இந்த மலைப்பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதில் ராட்சத கொடூர மலைப்பாம்பு பிற விலங்குகளை எப்படி வேட்டையாடி விழுங்குகிறது என்பதை நாம் காணலாம். இந்த வீடியோ முழுமையாக நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.

இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் திகிலான வீடியோவில், மலைபாம்புகளின் பல வகையான வீடியோ காண முடிகிறது. ஒவ்வொரு வீடியோவிலும் அந்த பாம்புகள் தங்களின் இரையை எப்படி கொலை செய்கிறது என்பதை காணல்மா. குரங்கு, முதலை முதல் சிங்கம் வரை அனைத்து வகையான விலங்குகளையும் அந்த மலைப்பாம்புகள் வேட்டையாடுகிறது. இது போன்ற வீடியோக்களை கட்டாயம் நீங்கள் இதற்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். மேலும் இந்த வீடியோகளை முழுமையாக நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.

திகிலூட்டும் வீடியோவை இங்கே காணுங்கள்:

கதிகலங்க வைக்கும் இந்த வீடியோக்கள் Jungle Cast என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | சில்மிஷம் செய்த குரங்கை முறைத்த பெண்: 'பளார்..' ஒரே அடி...வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More