Home> Social
Advertisement

குழந்தையை கொஞ்சும் குரங்குகள், உருகும் நெட்டிசன்ஸ்: மனதை உருக்கும் வைரல் வீடியோ

Cute Monkey Child Video: இந்த வீடியோவை நீங்கள் ஒரு முறை பார்த்தால் உங்களால் மீண்டும் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியாது

குழந்தையை கொஞ்சும் குரங்குகள், உருகும் நெட்டிசன்ஸ்: மனதை உருக்கும்  வைரல் வீடியோ

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நமது மனம் சோர்வடையும் போதெல்லாம், அதிலிருந்து நிவாரணம் காண நாம் வேறெங்கும் போக வேண்டியதில்லை. சமூக ஊடகங்களில் பகிரப்படும் பல வித வேடிக்கையான வீடியோக்களே இதற்கு தீர்வாக அமைகின்றன. அப்படி ஒரு வீடியோ மீண்டும் பகிரப்பட்டுள்ளது. ஒரு சிறு குழந்தை மற்றும் குரங்குகள் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக உங்கள் மனதை இதமாக்க்குவதுடன் முகத்தில் புன்னகையையும் வரவழைக்கும்.

மேலும், நீங்கள் ஒரு விலங்கு பிரியராக இருந்தால், கண்டிப்பாக இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள். வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு குழந்தைக்கும் சில குரங்குகளுக்கும் இடையில் இருக்கும் அருமையான பந்தத்தை காண முடிகின்றது. 

மனதை உருக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@magic._.editz_)

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு சின்னஞ்சிறு பெண் குழந்தை சில குரங்குகளுடன் விளையாடுவதை காண முடிகின்றது. குரங்குகள் குழந்தையைச் சுற்றி ஓடி விளையாடுகின்றன. குழந்தையும் குரங்குகளை ஆசையாக தடவிக்கொடுக்கின்றது. சில குரங்குகளும் குழந்தையை மெதுவாக தொட்டு பாசத்தை வெளிப்படுத்துகின்றன. 

மேலும் படிக்க | ஹார்லி டேவிட்சனில் பால் டெலிவரி செய்யும் வைரல் 'அண்ணாமலை' - வீடியோ இதோ...!

இந்த வீடியோவை பார்க்க மிக அழகாக உள்ளது. குழந்தையின் கியூட் பாணியும் குரங்குகளின் பாசமான போக்கும் காண்பவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கின்றது. 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @magic._.editz_ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளையும் ஏகப்பட்ட வியூஸ்களையும் பெற்றது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

"இந்த வகையான வீடியோக்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக நடனமாடத் தோன்றுகிறது" என ஒருவர் எழுதியுள்ளார். "இந்த வீடியோ என்னை சிரிக்க வைத்தது" என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். “அன்புதான் கடவுள்! அன்பை விவரிக்க முடியாது! மனிதர்களாகிய நாம் அடிப்படையில் அக்கறையுடனும் கருணையுடனும் இருந்தால், உலகில் உள்ள பலர் நன்றாக இருப்பார்கள்! ”என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.

இருப்பினும், இதற்கு எதிர்மறையான கமெண்டுகளும் வந்துள்ளன. குரங்குகளை நம்ப முடியாது என்றும், வீடியோ எடுப்பதற்காக குழந்தையை குரங்குகளுக்கு மத்தியில் விட்டது தவறு என்றும் சிலர் தங்கள் அக்கறையையும் தெரிவித்து விமர்சித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Viral Video : தனது பைக்கில் ஏற மறுத்த ஏரியா பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More