Home> Social
Advertisement

ஃபேஷன் ஷோவில் மாடல் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!

ஃபேஷன் ஷோவின் போது ரேம்ப் வாக் செய்த மாடல் ஒருவர் திடீரென்று தனது கோட்டால் அங்கிருந்த பார்வையாளரை அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.  

ஃபேஷன் ஷோவில் மாடல் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!

பலரும் விரும்பும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஃபேஷன் ஷோ (Fashion Show), இதில் நடக்கும் சில எதிர்பாராத நிகழ்வுகள் விரைவில் இணையவாசிகளை கவர்ந்து விடுகிறது.  அந்த வகையில் நியூயார்க்கை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் கிறிஸ்டியன் கோவன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை மாடல்கள் அணிந்து கொண்டு ரேம்ப் வாக் செய்த நிகழ்ச்சியில் மாடல் ஒருவரின் செயல் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  இவரின் எதிர்பாராத செயல் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்ததோடு, எதற்காக அவர் இப்படி செய்தார் என்றும் யோசிக்கும்படியாக செய்து இருக்கிறது.

ALSO READ | அட்ராசிட்டி தாத்தாவின் ஜாலி குத்தாட்டம்! வைரலான வீடியோவால் ஜெயிலுக்குள் சென்ற சோகம்...

ஆடை வடிவமைப்பாளர் கிறிஸ்டியன் கோவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த காட்சியை பதிவு செய்து அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.  கிறிஸ்டியன் கோவன் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், மாடல் அழகி ஒருவர் கருப்பு மற்றும் பிங்க் நிறத்தில் கிராப் டாப் மற்றும் மினி ஸ்கர்ட் செட் அணிந்து கொண்டு ஃபேஷன் ஷோவில் தனது ரேம்ப் வாக்கை தொடங்குகிறார்.  அவரின் ரேம்ப் வாக்கை பார்க்க அங்கு குழுமியிருந்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தபடி அவரை உற்சாகமாக வரவேற்கின்றனர்.  

fallbacks

அந்த மேடையில் நடந்து வந்த அவர் திடீரென்று கையில் வைத்திருந்த அவரது கோட்டை எடுத்து பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி வேகமாக சென்று அங்கு அமர்ந்திருந்த பார்வையாளர் ஒருவரின் முகத்தில் வேகமாக அடித்துவிட்டு, எவ்வித பதற்றமும் இல்லாமல் சாதாரணமாக அவரது ரேம்ப் வாக்கை மீண்டும் தொடர்ந்து நிகழ்ச்சியை நிறைவு செய்கிறார்.  இதனை பார்த்த பலரும் என்ன நடக்கிறது என்று ஒன்னும் புரியாமல் திகைத்து போயினர். 

 

கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இணையவாசிகளை வெகுவாக கவர்ந்ததுடன் இதுவரை 194k பார்வைகளை கடந்து வைரலாகியுள்ளது.  அதுமட்டுமல்லாது இந்த வீடியோவானது TikTok-ல் பதிவிடப்பட்டு அதிலும் வைரலாகி, 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து இருக்கிறது.  அந்த வீடியோவில் உள்ள மடல் அழகியின் பெயர் தியோடோரா குயின்லிவன் என்பது  கிறிஸ்டியன் கோவனின் பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது.  இந்த வீடியோவை பார்த்த பலரும் பலவாறான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  அதில் ஒரு பயனர் 'நான் இதை பார்க்கும்போது ஒரு தேளின் சக்தியை உணர்கிறேன்' என்று கமெண்ட் செய்துள்ளார்.

ALSO READ | 'முடிஞ்சா தொட்டுப்பார்.....' என பாம்பை பதறவைத்த கோழியின் வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More