Home> Social
Advertisement

அபூர்வ பாம்பை ஓடிப்போய் பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ

பாம்பின் அபூர்வ வகைகளை ஒருவர் தேடி தேடி பிடிக்கும் வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ மட்டும் கிட்டதட்ட 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.  

அபூர்வ பாம்பை ஓடிப்போய் பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ

அரிய வகை விலங்குகள் எல்லாம் இந்த பூமியில் நிறைந்து கிடக்கின்றன. அவற்றில் பல இன்னும் மனிதர்களின் கண்களுக்கு தென்படாமலேயே அல்லது கண்டுபிடிக்கப்படாமலேயே இருகின்றன. இருக்கும் விலகுகள், பாம்புகள் மற்றும் பறவைகளில் கூட மனிதர்களின் ஆராய்ச்சியில் சிக்காமல் இருக்கின்றன. அவை அரிதினும் அரிதான சந்தர்பங்களில் மனிதர்களின் கண்களுக்கு தென்படும்போது, அவை அபூர்வமானதாக குறிக்கப்படுகிறது. அந்தவகையில், அபூர்வ விலங்கினங்கள் மற்றும் பாம்புகளை தேடிதேடி ஓடும் ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பாம்புகள் மற்றும் குருவி, தவளை என தன் கண்களுக்கு தென்படுபவற்றை எந்த பயமும் இல்லாமல் பிடித்து விளையாடுகிறார்.

மேலும் படிக்க | Viral Video: மிரட்டிய பெண் சிங்கம்.. அடங்கிப் போன ஆண் சிங்கம்!

இரவில் ஒரு இடத்துக்கு செல்லும் அவர், அங்கு முதலை ஒன்று இரைக்காக தண்ணீரின் மேல் முகம் தெரியாத அளவுக்கு காத்துக் கொண்டிருப்பதை கவனித்து விடுகிறார். பார்க்காமல் சென்றிருந்தால் அந்த முதலைக்கு இரையாக கூட வாய்ப்பிருந்துள்ளது. அடுத்தாக பாம்பு ஒன்றை இரவில் பார்க்கும் அவர், வேகவேகமாக ஓடிச்சென்று பிடிக்கிறார். ஒன்றிரண்டு பாம்புகளை படம் பிடித்ததோடு நின்றுவிட்ட அந்த நபர், சில பாம்புகளை மட்டும் கையில் எடுக்கிறார். அவை ஏதோ விஷம் இல்லாதவைபோல் தெரிகிறது. பாம்பை பிடித்து அதனுடைய தலையை அமுக்கி பார்க்கும் அவர், தவளை மற்றும் குருவியையும் அப்படியே செய்கிறார். அதில் ஒரு பாம்பு அந்த நபரை கடிக்கிறது. இருந்தாலும் அவர் எந்த சலசலப்பும் செய்யவில்லை.

ஏனென்றால் அந்த பாம்பு விஷம் அல்லாதவையாக இருக்கக்கூடும். அதனால் தான் அவ்வளவு ஜாலியாக இருக்கிறார். இல்லையென்றால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார். இந்த வீடியோ முழுவதும் பாம்புகளே அதிகமான தென்படுகின்றன. ஒரு மரத்தில் மட்டும் ஏராளமான பாம்புகள் இருக்கின்றன.வீடியோவில் பார்க்கும்போது குலை நடுங்குகிறது. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இப்படியும் ஜீவன்கள் இருக்கின்றன என்பதை வீடியோ மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தளவுக்கு வித்தியாசமான முறையில் வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இது என்ன தலைகீழா இருக்கு!! பாம்பை பாடாய் படுத்தும் நாய்கள்... வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More