Home> Social
Advertisement

பளார்... சிறுத்தையை அடித்த பல்லி: ஷாக்கில் சிறுத்தை, நாமும்தான்...வைரல் வீடியோ

Unbelievable Animal Video: ஒரு பெரிய சிறுத்தையை சத்தமாக பளார் என அறைந்த ராட்சத பல்லியின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

பளார்... சிறுத்தையை அடித்த பல்லி: ஷாக்கில் சிறுத்தை, நாமும்தான்...வைரல் வீடியோ

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

வனவிலங்குகள் மீதுள்ள ஆர்வம் காரணமாக மக்கள் அடிக்கடி சுற்றிப்பார்க்க சஃபாரிகளில் காடுகளுக்கு செல்கிறார்கள். இந்த பயணங்களில் ஜங்கிள் சஃபாரியை ரசிப்பதுடன், சிலர் காடுகளின் சிறப்பான மற்றும் தனித்துவமான தருணங்களை தங்கள் கேமராக்களில் படம் பிடித்துக் கொள்கின்றனர். இவற்றில் சிலவற்றை சமூக ஊடகங்களிலும் பகிர்கிறார்கள். அப்படிபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சில அபூர்வமான நிகழ்வுகளை நாம் காண முடிகின்றது. 

சமீபத்தில் இது போன்ற அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து பயனர்களாலும் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. வைரலாகி வரும் வீடியோவில், காட்டில் பயங்கரமான வேட்டையாடும் விலங்குகளில் ஒன்றான சிறுத்தையை, ஒரு சிறிய விலங்கு அறைவது காணப்படுகின்றது. இதைப் பார்த்து பயனர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து இணையவாசிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

மேலும் படிக்க | நாங்களும் செல்பி எடுப்போம்..! பென்குயின் செல்பி எடுத்த வீடியோ இணையத்தில் வைரல்

நம்ப முடியாத அந்த வீடியோவை இங்கே காணலாம்:

சிறுத்தையை அறைந்த பல்லி

இந்த வைரலான வீடியோ @TheFigen_ என்ற கணக்கிலிருந்து ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளியில், காட்டின் நடுவில் சிறுத்தை ஒன்று பெரிய ராட்சத பல்லியை வேட்டையாடும் நோக்கத்துடன் அதன் அருகில் செல்வதை காண முடிகின்றது. ஆனால், பல்லி அங்கிருந்து ஓடுவதற்கு பதிலாக, சிறுத்தையை எதிர்கொள்கிறது. சிறுத்தை அந்த பல்லியின் மீது தனது பாதத்தை வைத்து அதை நசுக்க முற்படுகிறது. ஆனால், சரியான தருணத்தில் பல்லி தன் வாலைச் சுழற்றி சிறுத்தையின் முகத்தில் பளாரென்று சத்தமாக அறைகிறது.

ரசித்து பார்த்த பயனர்கள் 

வீடியோவில் பல்லி ஒன்று சிறுத்தையை இப்படி அறைந்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த செய்தியை எழுதும் வரை 4 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் இதை பார்த்துள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் இதை விரும்பியுள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | உடைந்த நாற்காலி..பென்ஷன் பெற உச்சி வெயிலில் நடந்து செல்லும் மூதாட்டி: வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More