Home> Social
Advertisement

வேட்டையாட வந்த சிங்கத்தை வகுந்தெடுத்த காட்டெருமை - வைரல் வீடியோ

வேட்டையாட வந்த சிங்கத்தை விரட்டி விரட்டி துரத்தியடிக்கும் காட்டெருமையின் வீடியோ வைரலாகியுள்ளது.  

வேட்டையாட வந்த சிங்கத்தை வகுந்தெடுத்த காட்டெருமை - வைரல் வீடியோ

சரியான நேரத்தில் தாக்குதலை தொடுக்காவிட்டால் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு இந்த வீடியோ சரியான உதாரணம். நேரம் வரும் வரை காத்திருந்து, சரியாக அடித்தால் மட்டுமே வெற்றி கிட்டும். இல்லையென்றால் தோல்வி மற்றும் ஆபத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது. இது ஒரு சிறந்த வாழ்க்கைக்கான பாடம். இப்படியான பாடத்தை கல்வி நிலையங்களில் கற்றுக் கொள்வதைக்காட்டிலும், அனுபவ ரீதியாக, சில சந்தர்பங்கள் நமக்கு உணர்த்தி விட்டுச் செல்லும். நமக்கு ஏற்பட்ட பின்பு அதனை உணர்வது வேறு.பிறருக்கு ஏற்படும்போது பார்த்து கற்றுக்கொள்வது என்பது வேறு.

மேலும் படிக்க | ஓவரா போற, ஒழுங்கா இரு: சீண்டிய நபரின் சட்டையை பிடித்து திட்டிய ஒராங்குட்டான்

இந்த வீடியோ இரண்டாவது ரகம். சிங்கம் சரியான நேரத்தில் தாக்குலை தொடுக்காமல் விட்டுவிட்டதால் அடி வாங்கிவிட்டு ஓடுகிறது. அதாவது காட்டு எருமையைக் கொல்ல, சிங்கம் ஒன்று முயற்சி செய்துள்ளது. காத்திருந்த சிங்கம், சரியான நேரம் என கருதி காட்டெருமையை வேகமாக ஓடித் தாக்குகிறது. இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், காட்டெருமை சுதாரித்துக் கொள்கிறது. தாக்க வந்த சிங்கத்திடம் தப்பிக்க முயற்சி செய்யும் அந்த காட்டெருமைக்கு வெற்றி கிட்டுக்கிறது.

சிங்கம் செய்த தவறை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் காட்டு எருமை, சிறிது நேரம் தாக்கிய சிங்கத்திடம் அமைதி காக்கிறது. இதனால் சிங்கம், காட்டெருமை அடங்கிவிட்டதாக நினைத்து ரிலாக்ஸ் கொடுக்க அந்த கண நேரத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறது. நொடிப்பொழுதில் சிங்கத்தை கொம்புகளால் தூக்கி வீசுகிறது. அதுமட்டுமில்லாமல் சிங்கத்தை துரத்தி துரத்தி கொம்புகளால் குத்துகிறது. அச்சத்தின் உச்சத்துக்கு சென்ற சிங்கம் தப்பித்தால்போதும் என்ற நிலைக்கு வந்த ஓடுகிறது. ஆனால் கோபம் தீறாத காட்டெருமை, சிங்கத்தை பின்னால் துரத்திச் சென்று தாக்குகிறது. டிவிட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்து வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: பாம்பை கொத்திக் குதறும் பறவைகள்; மனம் பதற வைக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More