Home> Social
Advertisement

Viral Video of Crocodile: இது எங்க ஏரியா உள்ள வராத: மிரட்டும் முதலையின் சாலை உலா

உலகின் மிக நீளமான முதலை சாலையை கடக்கும்போது எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Viral Video of Crocodile: இது எங்க ஏரியா உள்ள வராத: மிரட்டும் முதலையின் சாலை உலா

Viral Video of Crocodile: கேமராவில் சிக்கிய உலகின் மிகப்பெரிய முதலையை வீடியோவில் பார்த்தால் ஆசையாக இருக்கிறது. ஆனால் அதுவே அது உலகின் மிகப்பெரிய முதலையாக இருந்தால்?

உலகின் மிகப்பெரிய முதலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது 16 அடி கொண்ட முதலை. 
தோராயமாக 16 அடி நீளமுள்ள முதலையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. உலகின் மிக நீளமான முதலை சாலையை கடக்கும்போது எடுத்த வீடியோ இது. 

சமூக ஊடகங்களில் எதை எப்போது பார்க்க முடியும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. சில நேரங்களில் குழந்தைகளின் வீடியோ பலராலும் விரும்பப்படும். 

டான்ஸ் வீடியோ, குறும்பு வீடியோ, பாம்பு வீடியோ, விலங்குகளின் வீடியோ என பலவிதமான வீடியோக்களைப் பார்த்து ரசித்திருக்கலாம்.

மேலும் படிக்க | சிக்கிய பாம்பை காப்பாற்றிய பொதுமக்கள்: நெகிழ வைக்கும் வீடியோ 

சில நேரம் சிரிக்க வைக்கும் வீடியோக்கள், பல நேரங்களில் ஆச்சரியப்படுத்துகின்றன என்றால், சில சமூக ஊடக வீடியோக்கள் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. 

அப்படி ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ராட்சத முதலையின் வீடியோ. இந்த வீடியோ, இதுவரை பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்களும் போட்டிபோட்டுக் கொண்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் காட்டில் இந்த ராட்சத முதலை சாலையை கடக்கும்போது எடுத்த வீடியோ இது. வனப்பகுதிக்குள் அகலமான பாதை உள்ளது. சாவகாசமாக ராட்சத முதலை சாலையை கடக்கிறது.

இந்த வீடியோவில், சாலையை கடந்த முதலை, சாலையின் மறுபுறத்தை எட்டிய பிறகும் கூட அதன் உடலில் ஓரளவு தான் தெரிகிறது. அதாவது சாலை 14 அடி என்றால், அதை விட அதிகமான நீளம் கொண்ட முதலை இது என்று சமூக ஊடகத்தில் பயனர்கள் கணிக்கின்றனர்.

சில நொடிகளில் கடக்க வேண்டிய சாலையை, இந்த ராட்சத முதலை 39 வினாடிகள் கொண்ட வீடியோவின் முழு நேரத்திலும் கடக்கிறது. இந்த வீடியோ நியூஸ்ஃப்ளேர் என்ற பெயரில் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இது ஆயிரக்கணக்கான பார்வைகள், விருப்பங்கள் மற்றும் கருத்துகளைப் பெற்றுள்ளது. ராட்சத முதலைக்கு லட்சக்கணக்கானவர்கள் லைக் போட்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க | பதபதைக்க வைக்கும் முதலைகளின் சண்டை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More