Home> Social
Advertisement

Video: இசை மேடையில் சிறுமிக்கும் முத்தம் கொடுத்த பிரபலம்!

கனடா நாட்டை சேர்ந்த பிரபல இசை பிரபலம் டார்கி, தனது இசை நிகழ்ச்சியில் 18-வயதிற்கு குறைவான பெண் ஒருவருக்கு முத்தம் அளித்த விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது!

Video: இசை மேடையில் சிறுமிக்கும் முத்தம் கொடுத்த பிரபலம்!

கனடா நாட்டை சேர்ந்த பிரபல இசை பிரபலம் டார்கி, தனது இசை நிகழ்ச்சியில் 18-வயதிற்கு குறைவான பெண் ஒருவருக்கு முத்தம் அளித்த விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது!

சமீபகாலமாக இணையத்தில் பல சவால்கள் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தியா உள்பட உலக அளவில் பிரபலமான சவால KiKi Challenge தான். இந்த பாடலை பாடிய டார்க்கி, இந்த சவாலுக்கு பின்னர் உலக அளவில் பிரபலமானார்.

உள்ளூரில், தனது பாடலுக்கு மட்டுமல்லாமல் மைனர் பெண்களுடன் அடிக்கடி தென்பட்டு சட்ட பிரச்சனையில் சிக்கி பிரபலமானவர் டார்க்கி. தற்போது இவரது KiKi பாடல் உலக அளவில் புகழ் பெற்றதை அடுத்து, அவரது மறுபக்கமும் பிரபலமாகி வருகிறது.

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ கடந்த 2010-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது, எனினும் தற்போது இவரது KiKi பாடல் பிரபலமானதால் இந்த வீடியோவினை தோண்டி எடுத்து இணைய பிரியர்கள் பிரபலமாக்கி வருகின்றனர். இந்த வீடியோவில் இவர் 17-வயது மதிப்புத்தக்க பெண் ஒருவருடன் மேடையில் நடனமாடி பின்னர், அவரை முத்தமிடுகின்றார். இச்சம்பவத்திற்கு முன்னதாக அவரின் வயதை கேட்டறியும் டார்க்கி, பின்னர் சட்ட பிரச்சனை வரும் என்பதை உணர்ந்தும் மைனர் பெண்ணுக்கு முத்தமிடுகின்றார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது, அதே வேலையில் ரசிகர்களும் டார்க்கி-யின் பழைய ஜாதகங்களை தங்கள் பங்கிற்கு பரப்பி வருகின்றனர்.

Read More