Home> Social
Advertisement

Viral Video: ஜெல்லி மீனை சுவைத்து சாப்பிடும் ஆமை... இணையத்தில் வைரலாகும் வீடியோ

சமூக வலைதளங்களில் பார்ப்பதற்கு அரிய பல விஷயங்களை நாம்  வீடியோக்களில் காணும் நிலையில், ஆமை வீடியோவில், ஆமை ஒன்று ஜெல்லிமீன் ஒன்றை சுவைத்து சாப்பிடுவதைக் காணலாம். 

Viral Video: ஜெல்லி மீனை சுவைத்து சாப்பிடும் ஆமை... இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணைய உலகம் நமக்கு பல விதமான செய்திகளை கொடுக்கும் அற்புத ஊடகம். பல வித அரிய தகவல்களை கொண்ட ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல வகைகளில் தகவல் களஞ்சியமாக விளங்குகின்றன செய்திகளை வழங்குகின்றன. 

பயனுள்ள பல தகவல்களுடன் பொழுது போக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை. நமது துரித கதியிலான அன்றாட வாழ்வில் ஏற்படும் டென்ஷன் நீங்க, இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன என்றால் மிகையில்லை. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காரணம் விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். இவற்றில் சில வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு (Viral Video) வைரலாகின்றன. அவற்றில் ஒன்று தான் சமீபத்திய ஆமை வீடியோ.

பார்ப்பதற்கு அரிய பல விஷயங்களை நாம்  வீடியோக்களில் காணும் நிலையில், ஆமை வீடியோவில், ஆமை ஒன்று ஜெல்லிமீன் ஒன்றை சுவைத்து சாப்பிடுவதைக் காணலாம். தெளிவான கடல் பரப்பில், ஆமை நீந்தி வருவதையும், அது ஜெல்லி மீனை மெல்ல மெல்ல சுவைத்து சாப்பிடுவதையும் காணலாம். 

வைரலாகும் ஆமை வீடியோ:

 

நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையின் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சிறப்பாக பொருந்தும் இடம் மிருகங்களின் வாழ்க்கை. வல்லமை என்பது உடல் வலிமை மட்டும் குறிப்பது அல்ல. அது மன வலிமையையும் கூட.  இதனை நிரூபிக்கும் வகையில், சில நாட்களுக்கு முன் புலிக் குட்டி ஒன்று, பாம்பை கண்டு பதுங்கும் வீடியோ மிகவும்  வைரலாகியது. இந்த வீடியோ பார்த்தால் வன வாழ்க்கையின் உண்மை நிலையை உணராலாம். காட்டில் உயிர்வாழ்வதற்கு எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் சமயோஜித புத்தி ஆகிய அனைத்தும் தேவைப்படுகிறது.

வைரலாகிய புலி நாகப்பாம்பு வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்

மேலும் படிக்க | Viral Video: இது என்னடா வீரனுக்கு வந்த சோதனை... நாகப்பாம்பை கண்டு பதுங்கிய புலி குட்டி...

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | விநாயகர் சிலையை கரைக்க நவீன மிஷின்!! வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More