Home> Social
Advertisement

அனகோண்டாவுடன் நேருக்கு நேர் வந்த நபர், பதற வைக்கும் வைரல் வீடியோ

இந்த வீடியோவில் நபர் ஒருவர் ஸ்கூபா டைவிங்கிற்காக தண்ணீரில் குதிப்பதைக் காணலாம். ஆனால் அப்போது ஒரு மாபெரும் அனகோண்டாவை நேருக்கு நேர் அந்த நபர் சந்திக்கிறார்.

அனகோண்டாவுடன் நேருக்கு நேர் வந்த நபர், பதற வைக்கும் வைரல் வீடியோ

அனக்கோண்டா பாம்பு தென் அமெரிக்காவிலே நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினத்தில் ஒன்று. இது பெரும்பாலும் தென் அமெரிக்காவின் வட நாடுகளிலேயே காணப்ப்படுகின்றது. இப்பாம்பைப் பற்றி விளக்கமான அறிவு 1992 ஆம் ஆண்டு வரை ஏதும் அதிகமாய் இல்லை. நன்றாக வளர்ந்த முழுப்பாம்பு சுமார் 8-10 மீ நீளம் இருக்கும் (20-30 அடி), எடையில் 100-200 கிலோ இருக்கும். தடிப்பு 30 செ.மீ இருக்கும். உலகிலேயே எடையில் அதிகமான இடத்தைப் பிடித்திருப்பது இப்பாம்புதான்.

இது பெரும்பாலும் எலி, ஆடு, மான், தேப்பிர் என்னும் விலங்கு, சிறு கைமன் என்னும் முதலைகள் மற்றும் பறவைகள் முதலியவற்றை சுற்றி வளைத்து நொறுக்கிக் கொன்று உண்ணும். போவா, மலைப்பாம்பு போன்றே இதுவும் இரையை உண்ணுகின்றது, ஆனால் நீர்நிலைக்கு இழுத்துச்சென்று நீரில் முழுகடித்தும் கொல்லும். அனக்கோண்டாவில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பச்சை நிறம் கொண்டது ஒன்று, மஞ்சள் நிறம் கொண்டது ஒன்று.'

அனகோண்டாவுடன் சந்திப்பு

இந்த நிலையில் அனக்கோண்டா பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் நபர் ஒருவர் தண்ணீரில் டைவ் அடித்திருப்பதை நாம் காணலாம். அவர் ஸ்கூபா டைவிங் செய்வதற்காக தண்ணீருல் சென்றிருக்கலாம். அப்போது அந்த நபர் அங்கு ஒரு பெரிய சைஸ் அனகோண்டாவுடன் நேருக்கு நேர் வருவதை நாம் காணல்மா. இதற்குப் பிறகு பிரேமில் காணப்படுவது உண்மையிலேயே உங்களை அதிர்ச்சியப்படுத்தும். ஏனெனில் அந்த பாம்பு நபருக்கு எந்தத் தீங்கும் செய்யாமல், அதன் பாதையை மாற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிடுகிறது. 

பதற வைக்கும் வைரல் வீடியோவை இங்கே பார்க்கவும்

இந்தக் காட்சி எங்கிருந்து, எந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கதிகலங்க வைக்கும் இந்த வீடியோ @thatsinsane__ என்கிற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | சில்மிஷம் செய்த குரங்கை முறைத்த பெண்: 'பளார்..' ஒரே அடி...வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More