Home> Social
Advertisement

மழையில் மல்லாக்க படுத்தா எவ்ளோ சுகம்..! குழந்தையின் அழகு வீடியோ வைரல்

சிறுசிறு துளிகளாக பெய்த மழையில் நனைந்து கொண்டு நிற்கும் சிறிய குழந்தை திடீரென மல்லாக்க கீழே படுத்து அந்த மழையை ரசிக்கும் வீடியோ காண்போரை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறது.   

மழையில் மல்லாக்க படுத்தா எவ்ளோ சுகம்..! குழந்தையின் அழகு வீடியோ வைரல்

மழையில் குழந்தை நனையும் வீடியோவை பார்த்தால், ரசனைக்கு வெகு தொலைவில் சென்றவர்கள் கூட, நாமும் இப்படி செய்யாமல் விட்டுவிட்டோமே?, மழையில் நனைவதை மறந்துவிட்டோமே? என எண்ணுவார்கள். ஏனென்றால் இப்போதைய உலகில் வேகமாக ஓடிக் கொண்டிருப்பவர்கள் சின்ன சின்ன ரசனைகளையெல்லாம் மறந்துவிட்டு ஏன் ஓடுகிறோம்? எதற்காக ஓடுகிறோம்? இதனால் கிடைக்கும் இந்த வாழ்வியல் பயன் என்ன? என்று சிந்திக்க நேரமில்லாமல் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளில் ஓர் இடத்தில் அவர்கள் நின்று கொண்டு திரும்பி பார்க்கும்போது, மலரும் நினைவுகள் என்று ஒன்று இருக்கவே இருக்காது. ரசனை என்றால் என்ன? என்பது கூட தெரியாமல் மருத்துபோன மரமாக கேள்வி கேட்பார்கள்.

மேலும் படிக்க | பறவையை பதம் பார்த்த ராட்சத மலைப்பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ

அந்தளவுக்கு வாழ்க்கையை இயந்திரமயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் நம்மில் பலர். ஆடு மாடு, மரம் செடி கொடிகளில் இருந்து மனிதன் வித்தியாசப்படுவது இந்த உலகை ரசிப்பதில் தான். மனிதனால் மட்டுமே இந்த உலகில் இருக்கும் அத்தனை செல்வங்களையும், இயற்கை பேரழகையும் சென்று ரசிக்க முடியும். அதற்காகவே நமக்கு கை, கால்கள் என்ற ஒன்றை இறைவன் கொடுத்திருக்கிறான் என எப்போதும் உலகை சுற்றிக் கொண்டு, பயணத்தில் இருப்பவர்கள் சொல்வார்கள். அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. நீங்கள் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து பயணத்தின் அனுபவங்கள் குறித்து சிந்தித்தீர்கள் என்றால் அந்த சிலாகிப்பு உங்களை அறியாமலேயே வரும். அப்போது உங்களுக்குள் வரும் ஒருவித ரசனை அன்று முதல் வாழ்வின் சின்னஞ்சிறு விஷயங்களையெல்லாம் பார்த்து ரசிக்கத் தொடங்கும். நீங்கள் அழகாக மாறுவீர்கள். ஆனந்தமாக இருப்பீர்கள்.

அப்படி ஒரு நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று தான் இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. சிறிய குழந்தை ஒன்று மழையை அழகாக ரசிக்கிறது. அந்த மழையில் விளையாடிவிட்டு நின்று கொண்டிருக்கும் அந்த குழந்தை, திடீரென மல்லாக்க படுத்து தன்னுடைய மகிழ்ச்சியை சிலாகித்து விளையாடுகிறது. இந்த கியூட்டான வீடியோ இப்புத இணையத்தில் வைரல் லிஸ்டில் இடம்பிடித்திருக்கிறது. Amazing Nature என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ சுமார் 30 ஆயிரம் பார்வைகளை கடந்துள்ளது.  நீங்களும் இந்த அழகான வீடியோவை பார்த்து ரசியுங்கள்.

மேலும் படிக்க | அட கடவுளே..பள்ளி ஆசிரியை செய்ய வேண்டிய செயலா இது..கடுப்பேத்தும் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More