Home> Social
Advertisement

பேருந்தில் குதிரை போஸ்டர்; தாய் என நினைத்து பின் சென்ற குதிரை குட்டி!

இணைய உலகில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன.

பேருந்தில் குதிரை போஸ்டர்; தாய் என நினைத்து பின் சென்ற குதிரை குட்டி!

இணைய உலகில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன. அதிலும் செல்ல பிராணிகளின் குறும்புகள் அல்லது மனதை தொடும் வகையிலான செய்கைகள் சில சமயங்களில் நமது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். சில சமயங்களில் நமது கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும். அந்த வகையில் குதிரை ஒன்றின் வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. 

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டதால், அதனை பிரிந்த குதிரை குட்டி, தனது தாயை தேடி திரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திபுரம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் குதிரை போன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த குதிரை குட்டி பேருந்தை செல்ல விடாமல் வழிமறித்துடன் பேருந்தையே சுற்றி வந்தது. 

மேலும் படிக்க | Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்

fallbacks

பேருந்து கிளம்பிய போது குதிரை படத்தைப் பார்த்தபடியே பேருந்தை துரத்தி சென்று கத்தியது. குதிரை குட்டியின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More