Home> Social
Advertisement

இனி கிட்ட வந்த இதான் நடக்கும்.. கொரில்லாவின் சேட்டை வீடியோ!

கொரில்லா குரங்கு ஒன்று அதனையும் அதன் குட்டியையும் தொல்லை செய்ய வந்த மற்றொரு கொரில்லா குரங்கை விரட்டியடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.  

இனி கிட்ட வந்த இதான் நடக்கும்.. கொரில்லாவின் சேட்டை வீடியோ!

கொரில்லா என்பது பெரிய மனித குரங்கு இனமாகும், இந்த வகை குரங்குகள் தான் மனிதர்களின் முன்னோடி என்றும் சில கூற்றுகள் உள்ளது.  கொரில்லா வகை குரங்குகளின் டிஎன்ஏ-க்கள் மனிதர்களின் டிஎன்ஏ-க்களுடன் கிட்டத்தட்ட 95-99% ஒத்துப்போவதாகவும் சில ஆய்வுகள் கூறுகிறது.  மனித இனத்துக்கு நெருக்கமான இந்த உயிரினமானது மனிதர்கள் செய்யும் குறும்புகளை போலவே பல விஷயங்களை செய்கிறது.  தன்னை தொந்தரவு செய்யும் மற்றொரு கொரில்லா குரங்கின் மீது ஒரு கொரில்லா காரி துப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரின் கவனங்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.  இந்த காட்சிக்கு நெட்டிசன்கள் சிரிப்பு எமோஜிக்களை தாராளமாக அள்ளி வீசக்கூடிய அளவிற்கு கொரில்லாவின் செயல் அமைந்துள்ளது.

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 

இந்த நகைச்சுவையான வீடியோ ட்விட்டரில் விலங்கினங்களின் குறும்புத்தனங்களை வெளிக்காட்டும் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் தான் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில் ஒரு கொரில்லா குரங்கு தனது மார்பு பகுதியில் தனது குட்டி கொரில்லாவை அனைத்து வைத்துக்கொண்டு வாளியில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை குனிந்து குடித்துக்கொண்டு இருக்கிறது.  அப்போது இந்த கொரில்லா குரங்கை நோக்கி மற்றொரு கொரில்லா குரங்கு அதனை தொல்லை செய்ய வருகிறது.  உடனே சுதாரித்துக்கொண்ட அந்த கொரில்லா தனது வாயில் உள்ள தண்ணீரை தன்னை நெருங்கி வந்த மற்றொரு கொரில்லா குரங்கின் மூஞ்சியில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போன்று காரி துப்பிவிடுகிறது.

 

தன் மூஞ்சியின் மீது காரி துப்பிய அவமானத்தில் அந்த மற்றொரு கொரில்லா குரங்கு முகத்தை துடைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு விலகி செல்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.  இந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது, இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்று வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | கரும்பு லாரியா? ஒரு டோக்கன் போட்டுட்டு போ..! யானையின் குறும்பு வீடியோ வைரல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More