Home> Social
Advertisement

பாத்டப்பில் கொரில்லாவின் மாஸ் நடனம்: பார்த்து மகிழும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

Funny Viral Video: இப்படி ஒரு நடனமா என வியக்க வைக்கும் கொரில்லாவின் நடன வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. கொரில்லாவின் மாஸ் டான்சை இந்த வீடியோவில் காணலாம்.

பாத்டப்பில் கொரில்லாவின் மாஸ் நடனம்: பார்த்து மகிழும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குளிக்கும் போது பலர் பாடிக்கொண்டு குளிப்பார்கள். இதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இவர்கள் குளியலறை பாடகர்கள் என்றும் கிண்டல் செய்யப்படுவார்கள். சிலர் குளிக்கும்போது சிறிது நடனமாடுவதும் உண்டு. குளிக்கும்போது அதிக குறும்புகளை செய்பவர்கள் குழந்தைகள். இவர்கள் பாத்டப்பை விட்டு வெளி்யே வருவதற்கே தயாராக இருப்பதில்லை. 

குழந்தைகளைப் போலவே, விலங்குகளுக்கும் குளிப்பது மிகவும் பிடிக்கும். குளிக்கும்போது விலங்குகளும் பல குறும்புகளை செய்வதுண்டு. இதை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | போட்டோஷூட் செய்த ஜோடி, பீதி காட்டிய யானை: கேரளா வைரல் வீடியோ 

ட்விட்டரில் கொரில்லாவின் பழைய நடன வீடியோ அதிகளவில் வைரலாகி, பயனர்களை மகிழ்வித்து வருகிறது. வீடியோவில், ஒரு கொரில்லா குளியல் தொட்டியில் வேடிக்கையாக நடனமாடுவதைக் காண முடிகின்றது. குளிக்கும் போது கொரில்லா இப்படி நடனமாடுவதைப் பார்த்து, பல பயனர்கள் தங்கள் குளியலறை நடனங்களை நினைவுபடுத்திக்கொள்கிறார்கள். இந்த வீடியோவை பார்ப்பவர்களால் கண்டிப்பாக தங்கள் சிரிப்பை நிறுத்த முடியாது. குளியல் தொட்டியில் மகிழ்ச்சியுடன் நடனமாடும் கொரில்லாவின் இந்த வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

கொரில்லாவின் பக்கா நடனம்

இந்த சுவாரஸ்யமான வீடியோ ட்விட்டர் ஹேண்டில் "@fasc1nate" என்ற பயனரின் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதன் தலைப்பில், "உல்லாசமாக நடனமாடும் கொரில்லாவின் த்ரோபேக் வீடியோ” என எழுதப்பட்டுள்ளது. டல்லாஸ் மிருகக்காட்சிசாலையின் இந்த கொரில்லாவின் பெயர் ஜோலா. இந்த கொரில்லா தனது டான்ஸ் வீடியோக்களால் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. 

இந்த சுவாரஸ்யமான வீடியோவில், கொரில்லா நீல நிற குளியல் தொட்டியில் மாஸாக நடனமாடுவதையும் தண்ணீரை தெறித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் காண முடிகின்றது. பின்னணியில் வரும் இசையால் இந்த வீடியோ பார்ப்பதற்கு இன்னும் வேடிக்கையாக உள்ளது. இந்த விடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | கூப்பிட்ட பெண், ஓடோடி வந்த எருமை: இதயங்களை இளக வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More