Home> Social
Advertisement

Video தலையில் 2 கனமாக சிலிண்டர்கள், கைகளில் மூவர்ணக்கொடி -அசத்திய இளைஞன்

Independence Day:  தலைக்கு மேலே பாட்டில், அதன் மேல் இரண்டு கனமான சிலிண்டர்கள், மூவர்ணக் கொடியை கையில் ஏந்தியவாறு.. வைரலாகும் வீடியோ

Video தலையில் 2 கனமாக சிலிண்டர்கள், கைகளில் மூவர்ணக்கொடி -அசத்திய இளைஞன்

Independence Day Viral Video: சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது. இன்று நம் நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான நமது நாடு (இந்தியா) திகழ்கிறது. இன்று நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் சுதந்திர தினத்தைப் பற்றிய உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலெல்லாம் இருந்து விதவிதமான படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவருகின்றன. தற்போது இதே போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து ஒரு நிமிடம் நீங்களும் ஆச்சரியப்படலாம். அந்த வீடியோவில், ஒரு இளைஞன் மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தும் காட்சியைக் காணலாம். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோக்களை பார்த்தால், நம் நாட்டில் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை என்பதை உணர்த்துகிறது. அதுவும் வித்தியாசமாகவும், புதுவிதமாகவும் பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும் விதமாகவும் வீடியோக்களை உருவாக்கி பலர் பகிர்ந்து வருகின்றனர். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு இளைஞன் அற்புதமான சாதனைகளை நிகழ்த்துவதைக் காணலாம். இதைப் பார்த்து இந்த இளைஞனை நீங்களும் பாராட்டுவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வீடியோவின் அந்த இளைஞன் தலைக்கு மேலே ஒரு பாட்டிலை வைத்துள்ளார். அதற்கு மேல் இரண்டு கனமான சிலிண்டர்களையும் வைத்துள்ளார். சிலிண்டரின் எடை மற்றும் பேலன்ஸ் பார்த்தால், ஒரு நிமிடம் கூட இந்த வீடியோவை எடுக்க முடியாது என்றே தோன்றும். ஆனாலும் அந்த இளைஞன் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தியவாறு ஏ ஆர் ரஹ்மான் பாடிய "மா துஜே சலாம்' (Maa Tujhe Salaam) என்ற பாடலின் பின்னணியில் வீடியோவை உருவாக்கி உள்ளார். 

மேலும் வீடியோ: கெத்து காட்டும் சிங்கத்தை துண்டைக் காணோம் துணையைக் காணோம் என விரட்டும் ராஜநாகம்

இந்த வீடியோ சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவை ​​'மா துஜே சலாம்' (Maa Tujhe Salaam) என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளர். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு மற்றும் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

மேலும் வீடியோ: ‘இப்படியா அடிச்சிப்பாங்க?’: பெண்களின் சண்டையால் வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More