Home> Social
Advertisement

கட்டிப்பிடித்து ‘பை’ சொல்ல ஓடி வந்த காதலிக்கு நேர்ந்த கதி: வைரல் வீடியோ

Lovers Viral Video: கட்டிப்பிடிக்க ஆசையாய் ஓடி வந்த காதலர்களுக்கு ஏற்பட்ட கதியை பார்த்தீர்களா? வைரலாகிறது வீடியோ!!

கட்டிப்பிடித்து ‘பை’ சொல்ல ஓடி வந்த காதலிக்கு நேர்ந்த கதி: வைரல் வீடியோ

வைரல் வீடியோ: இணையத்தில் தினமும் பல வித வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. இவை நமக்கு பல வித தகவல்களை அளிக்கின்றன. இதைத் தவிர சமூக ஊடகங்களில் வெளிவரும் பல கேளிக்கை வீடியோக்கள் நம்மை மகிழ்விக்கின்றன, சிரிக்க வைக்கின்றன. இவற்றை பார்த்து நாம் நமது இறுக்கங்களையும் துயரங்களையும் சிறிது நேரத்திற்கு மறக்கிறோம். இவை நமது மன அழுத்தங்களை அகற்றி மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன. நாம் நிஜ வாழ்க்கையில் பொதுவாக காண முடியாத சில அரிய காட்சிகள் இந்த வீடியோக்களில் காணக்கிடைக்கின்றன. 

சமீப காலங்களில், கணவன் மனைவி, புது மணமக்கள், காதலர்கள் என இவர்களின் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இவர்களுக்கு இடையிலான அன்பு, காதல், பாசம், கோவம், சண்டை என அனைத்து உணர்ச்சிகளையும் இந்த வீடியோக்களில் காண முடிகின்றது. தற்போதும் இப்படிப்பட்ட ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது. 

பிரிவு என்பது அனைவருக்கும் சோகமான ஒரு நிகழ்வாகும். பிரியும் தருணத்தில் எவ்வளவு பேசினாலும், பாசத்தை பொழிந்தாலும் திருப்தியாக இருப்பதில்லை. காதலர்கள் தற்காலிக பிரிவுகளின் போது, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பிரியாவிடை அளிப்பதுண்டு. இந்த செய்கையில் பிரியப்போகிறோமே என்ற சோகமும், மீண்டும் இணைவோம் என்ற மகிழ்ச்சியும் ஒன்றாக காணக்கிடைக்கும். 

 மேலும் படிக்க | மணமக்களின் வேற லெவல் குத்தாட்டம், வாய் பிளந்த விருந்தினர்கள்: வீடியோ வைரல்

சமீபத்தில் இணையத்தில் வெள்யிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில், பிரியாவிடை அளிக்க இரு காதலர்கள் (சமூக ஊடகங்களில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில்) திரைப்பட பாணியில் ஒருவரை நோக்கி மற்றொருவர் ஓடி வருவதை காண முடிகின்றது. ஆசையாக கட்டித் தழுவிக்கொள்ள ஓடி வந்தவர்களுக்கு நடந்த ஒரு விஷயம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

ஒரு பெண் தனது காதலனுக்கு குட் பை ஹக் கொடுக்க வேகமாக ஓடி வருகிறார். அவரது காதலனும் ஓடி வருகிறார். ஆனால் இருவரும் சரியாக ஒரே நேரத்தில் தடுக்கி விழுந்து விடுகிறார்கள். 

12 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் நூற்றுக்கணக்கான கமெண்டுகளையும் பெற்றுள்ளது. சிலர் இது பழைய வீடியோ என்றும், இப்போது மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது என்றும் கூறி வருகின்றனர். 

கட்டிப்பிடிக்க ஓடிய காதலர்களுக்கு ஏற்பட்ட பரிதாபத்தை இந்த வீடியோவில் காணலாம்: 

இணையவாசிகள் பலர் இந்த வீடியோவுக்கு இந்த வகையில் ரியாக்ட் செய்துள்ளனர்:

மேலும் படிக்க | தொட்டது குத்தமாடா, கணவனை வெச்சி செஞ்ச மனைவி; வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More