Funny Viral Video: வில்லேஜ் விஞ்ஞானி என்ற பெயரை நீங்கள் தமிழ் திரைப்படங்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள்... அதாவது, கிராமப்புறங்களில் அறிவாளியாக திகழ்பவர்களை இப்படி அழைப்பார்கள் என்றாலும், இதுபெரும்பாலும் எதிரில் இருப்பவரை பகடி செய்வதற்கே பயன்படுத்துவார்கள். ஆனால், இங்கு பகடியாக இல்லாமல் நிஜமாகவே வில்லேஜ் விஞ்ஞானிகளை நீங்கள் பார்க்கலாம். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் இருக்கும் வில்லேஜ் விஞ்ஞானிகளின் புத்திசாலித்தனத்தை நீங்கள் ரசிக்காமல் இருக்கவே முடியாது.
அதாவது, X தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் பைக் ஒன்று பிறந்தநாள் கேக் வெட்டும் சம்பவம்தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எது பைக் கேக் வெட்டுதா என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது... ஆனால், பைக்கை கேக் வெட்ட வைத்ததே நான் முன்னர் குறிப்பிட்ட வில்லேஜ் விஞ்ஞானிகள்தான். அந்த வில்லேஜ் விஞ்ஞானிகள் எப்படி பைக்கை கேக் வெட்ட வைத்தார்கள் என்பதை இதில் பாருங்கள்.
பைக் கேக் வெட்டியது எப்படி?
ஒரு Hero Splendor+ பைக்கின் முன் டயரில், பிறந்தநாள் கேக் வெட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் கத்தியை ஒட்டிவைத்திருக்கிறார்கள். அந்த பைக்குக்கு அன்று பிறந்தநாளாக இருக்க வேண்டும். அதாவது, அதன் உரிமையாளர் அந்த பைக்கை வாங்கிய தினமாக இருக்க வேண்டும். பைக்கின் முன் டயர் முன்னால் அந்த பிறந்தநாள் கேக்கை ஒருவர் கைகளில் ஏந்தியிருக்க, மற்றொருவர் அந்த பைக்கை முன்னும் பின்னுமாக நகர்த்தி ஒட்டப்பட்ட கத்தியை வைத்து அந்த கேக்கை அழகாக வெட்டுகிறார். அவர்களை சுற்றியிருப்பவர்களும் கைத்தட்டி, பைக் கேக் வெட்டுவதை கண்டு மகிழ்கிறார்கள்.
மேலும் படிக்க | வைரல் வீடியோ : விபத்தில் தூள்தூளான ஸ்கூட்டர், உயிர் பிழைத்த அதிசய மனிதன்
மிகவும் பிரியமான பைக்
இது ஏதோ நகைச்சுவையாக செய்யப்பட்ட வீடியோ போல் தெரியவில்லை. அந்த வீடியோவில் பைக்கை வைத்து கேக் வெட்டிய அனைவரும் மிகுந்த சீரியஸான முக பாவத்துடன் இருப்பதன் மூலம் அவர்கள் இதனை சீரியஸாக செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியென்றால் அவர்களுக்கு அந்த பைக் அந்தளவிற்கு நெருக்கமான ஒன்றாக இருக்கலாம். அந்த பைக் மிகவும் சுத்தப்படுத்தப்பட்டு பளீரென இருப்பதையும் காண முடிகிறது. அந்தளவிற்கு அந்த பைக்கின் மீது அவர்கள் நேசம் வைத்துள்ளதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
Girls : Do Men Even Have Feelings ??
— Babu Bhaiya (@Shahrcasm) September 10, 2024
Meanwhile Men, Celebrating Birthday Of Their Bike... pic.twitter.com/rHhFUwFlwW
குவியும் கமெண்ட்ஸ்
இந்த வீடியோ எப்போது, எங்கு, யாரால் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதேபோல் இதனை முதன்முதலில் சமூக வலைதளங்களில் பதிவேற்றியது யார் என்பதும் தெரியவில்லை. கடந்த செப். 10ஆம் தேதி அன்று @Shahrcasm என்ற X தள பயனர் பதிவிட்டுள்ளார்.இந்த பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோதான் தற்போது வைரலாகி உள்ளது. இந்த வைரல் வீடியோவுக்கு இதுவரை 1.1 வியூஸ் கிடைத்துள்ளது. 16 ஆயிரம் பேர் லைக் போட்டுள்ளனர். 1,500 பேர் தங்கள் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். 228 கமெண்ட்களும் இதில் பதிவிடப்பட்டுள்ளன.
இந்த பதிவில் ஆண்களுக்கு உணர்வுகளே என நினைக்கும் பெண்களே இந்த வீடியோவை பாருங்கள் என்ற தொனியில் நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடியோவில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் கத்தி தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது எனவும், நியாயப்படி ஹேண்டில் பாரில்தான் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் கமெண்ட் செய்துள்ளது பலரும் நகைப்பை ஏற்படுத்தியது. அதிலும் மற்றொருவர் ஆண்கள் அவர்களின் காதலியை விட பைக்கைதான் அதிகம் நேசிக்கிறார்கள் எனவும் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார். நீங்களும் இந்த வீடியோவை பார்த்து என்ன நினைக்கிறீர்கள் என கருத்து கூறுங்கள்.
மேலும் படிக்க | “என் மூஞ்சு மேலதான் உக்காருவியா?” சிங்கம் செய்யும் குறும்பு சேட்டை! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ