Home> Social
Advertisement

சிங்கத்தை துரத்தி துரத்தி படுத்தும் ஆமை, சைலண்டா சிங்கம் நிற்க காரணம் என்ன: வைரல் வீடியோ

Viral Video: சிங்கத்தின் பக்கத்தில் செல்ல அனைத்து விலங்குகளும் அஞ்சுவதை நாம் பார்த்துள்ளோம். எனினும், சிங்கத்தை சீண்டிப் பார்க்கும் ஒரு ஆமையின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

சிங்கத்தை துரத்தி துரத்தி படுத்தும் ஆமை,  சைலண்டா சிங்கம் நிற்க காரணம் என்ன: வைரல் வீடியோ

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் பொதுவாக வைரலாக பரவுகின்றன. பெரும்பாலான வீடியோக்களில், சிங்கம் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதைக் காண்கிறோம். ஆனால் சில நேரங்களில் சில மிருகங்கள் பயமின்றி சிங்கத்தையும் தாக்குகின்றன.

இப்போது மீண்டும் ஒரு சிங்கத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சிங்கத்தை துரத்தி துரத்தி படுத்தும் ஆமையை காண முடிகின்றது. சிங்கத்துக்கு கோவம் வந்தாலும், அது ஆமையை ஒன்றும் செய்யவில்லை. 

மேலும் படிக்க | கோழிக்குஞ்சுக்காக சண்டையிடும் 2 பாம்புகள்: வென்றது யார்? வைரல் வீடியோவில் விடை 

வீடியோ-வில், ஆமை சிங்கத்தை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்வதை காண முடிகின்றது. ஆனால் சிங்கம் ஒவ்வொரு முறையும் அதைப் புறக்கணித்து தண்ணீர் குடிப்பதிலேயே குறியாக இருக்கிறது. அந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. 

சிங்கத்தை சீண்டி சீன் போட்ட யானை

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆபத்தான தோற்றத்தில் காணப்படும் சிங்கம் ஒன்று தண்ணீர் குடிக்க ஆற்றின் கரைக்கு சென்றுள்ளதை காண முடிகின்றது. ஆனால் மீண்டும் மீண்டும் ஒரு ஆமை தண்ணீரிலிருந்து வெளியே வந்து சிங்கத்தை சீண்டுகிறது. அது சிங்கம் செல்லும் இடமெல்லாம் சென்று அதை தொந்தரவு செய்கிறது. 

இறுதியில், சிங்கம் கோபமடைந்து அங்கிருந்து வெளியேறுகிறது. இந்த வீடியோவில் சிங்கத்தின் பாணி ​​நெட்டிசன்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக சிம்ம சொப்பனமாய் இருக்கும் சிங்கம், தன்னை வலிய வந்து தொந்தரவு செய்யும் ஆமையை ஒன்றும் செய்யாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. 

காட்டு ராஜாவை கடுப்பேத்தும் ஆமையின் வீடியோவை இங்கே காணலாம்:

அமைதியாக சிங்கம், அசால்டாக ஆமை

பொதுவாக வேறு எந்த மிருகமும் சிங்கத்துடன் சண்டையிடத் துணிவதில்லை. அப்படி செய்தாலும், சிங்கம் உடனடியாக அதை இரையாக்கிவிடும். ஆனால் இந்த வீடியோவில் சிங்கம் மிகவும் அமைதியாக காணப்படுகின்றது. ஆமை பலமுறை தொல்லை கொடுத்தும் அது ஆமையை எதுவும் செய்யவில்லை. இந்த வீடியோ finestofworld என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு பல லைக்குகளும் குவிந்துள்ளன.

மேலும் படிக்க | Viral Video: ஆக்ரோஷமாக சண்டையிடும் சிறுத்தைகள்; இது இரைக்கான போராட்டம் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More