Home> Social
Advertisement

பட்டையைக் கிளப்பும் பாப்பாவின் ஓய் பாபா டான்ஸ்! லேடி பிரபுதேவா இவர் தானா?

Cute Girl Dance: பாட்டா இல்லை பட்டையை கிளப்பும் டான்ஸா என்ற கேள்விக்கு பதில் என்ன?  குட்டிப் பெண் ஒருவர் ஆடும் டான்ஸைப் பார்த்தால் உங்களுக்கு விடை கிடைக்கலாம்... ஏனென்றால் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

பட்டையைக் கிளப்பும் பாப்பாவின் ஓய் பாபா டான்ஸ்! லேடி பிரபுதேவா இவர் தானா?

வைரல் வீடியோ: மனதை மயக்குவது இசையா, நடனமா என்ற கேள்வி எப்போதும், எந்தக் காலத்திலும் முடியாதது. முட்டையில் இருந்து குஞ்சு வந்ததா, இல்லை குஞ்சில் இருந்து முட்டை வந்ததா என்ற கேள்விக்கான பதில் போலத் தான் பாட்டா இல்லை டான்ஸா என்ற கேள்விக்கு பதில் எதேனும் ஒன்று என்று சொல்லிவிட முடியுமா என்றால் தெரியவில்லை. இசையின் வரிகள் மற்றும் இசைக்கு ஒத்திசைந்து ஆடும் நடனம் என்று சொன்னால், அதற்கான உதாரணத்தைக் கொடுக்க வேண்டும்.

சினிமாவில் பாட்டும், டான்ஸும் முக்கியமான ஈர்ப்பாக இருக்கிறது. அதிலும் பாடல் என்றால், நடனம் தெரியாதவர்கள் கூட பாடிவிடுகிறார்கள். கேட்பதற்கு ஒரிஜினல் குரல் போல இல்லை என்றாலும், ரசிக்க வைக்கும்படி பாடி வெளியிடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன.

பார்வையாளர்களை மிகவும் ஈர்க்க, பாட்டும் நடனமும் ஒன்றாக ஒத்திசைந்தால் போதும். இதற்கு பெரிய மேடை எல்லாம் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் பாட்டை கேட்க இன்று நவீன வசதிகள் வந்துவிட்டன. மொபைலில் பாட்டை போட்டுவிட்டு, ஆடினால் போதும். டான்ஸ் நன்றாக இருந்தால், அது வைரலாக பரவி விடுகிறது. அந்த வகையில், குட்டிப் பெண் ஒருவர் ஆடும் டான்ஸ், பாட்டுடன் ஒத்து, அருமையாக இருப்பதால் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!

நடன நிகழ்ச்சி முழுவதும் குட்டிப் பெண் கொடுக்கும் ஸ்மைல், அட்டகாசமாய் இருப்பதாகவும் பலரும் கருத்திட்டுள்ளார்கள். இந்த வீடியோவை இறுதி வரை பார்த்து புன்னகைக்கலாம்...

வைரல் டான்ஸ் வீடியோ

 இதயத்தை கவரும் இந்த வீடியோவில், ஜுதாய் படத்திலிருந்து அல்கா யாக்னிக்கின் ‘ஓயி பாபா’ பாடலுக்கு நடனமாடும் சிறுமியின் வீடியோ வைரலாக பரவி, சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியது. @aadhyayasree__did இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், சிறுமி தனது அற்புதமான நடனத் திறனை வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.

மேலும் படிக்க | ப்ரெண்ட்ஸ் 2.0...படமே எடுக்கலாம் போல இருக்கே!! வாய் பிளக்க வைத்த நட்பு... வைரல் வீடியோ

பாடலின் வரிகள் மற்றும் இசைக்கு ஏற்றவாறு ஆடும் குழந்தையின் டான்ஸ் பார்வையாளர்களை மிகவும் ஈர்க்கிறது. அவர் நடன நிகழ்ச்சியையே நடத்திவிட்டார் என்று தோன்றுகிறது. ஆனால், டென்ஷனே இல்லாமல், ஜாலியாக ரசித்துக் கொண்டே சிரித்துக்கொண்டு டான்ஸ் ஆடுவதைப் பார்க்கும்போது புத்துணர்ச்சி பிறக்கிறது. 

விருப்பங்களும் கருத்துகளும்
இந்த வீடியோ நவம்பர் 28 அன்று பதிவேற்றப்பட்டது. இதுவரை 15 லட்சம் லைக்குகளையும் லட்சக்கணக்கில் பாராட்டுக்களையும் பெற்று டான்ஸர் ஆஃப் த இயர் என்று பாராட்டும் அளவுக்கு இந்த சிறுமி பிரபலமாகிவிட்டார்.  

"மிக அழகான பெண் குழந்தை" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தால், "ஆஹா அருமையான டான்ஸ்" என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார். “ஆஹா... சிறுமியின் அற்புதமான நடனம் மனதை கொள்ளை கொள்கிறது” என்று ஒரு பயனர் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | சொதப்பிய பைக் ஸ்டண்ட், பறந்து விழுந்த இளைஞர்: திகிலூட்டும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More