Home> Social
Advertisement

கருப்புச்சட்டைக்காரனுக்கு கோயிலுக்குள்ள என்னடா வேலை? யானை செய்த சேட்டை!

யானை ஒன்று அதனை தாண்டி சென்ற நபரை தனது தும்பிக்கையால் ஒரேயடியாக தள்ளி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

கருப்புச்சட்டைக்காரனுக்கு கோயிலுக்குள்ள என்னடா வேலை? யானை செய்த சேட்டை!

உருவ அளவில் பெரியதாக உள்ள யானையை பார்த்தால் பலருக்கும் ஒரு பயம் இருக்கும், சிலர் யானைக்கு  ஆசைப்படுவார்கள் அதே சமயம் யானையின் அருகில் செல்ல பயப்படுவார்கள்.  விலங்கினங்கள் என்னதான் மனிதர்களுக்கு சில சமயங்களில் செல்லமாக இருந்தாலும், பார்க்க அழகாக இருந்தாலும் அவை எதிர்பாராத சில சமயங்களில் மனிதர்களுக்கு விபத்துக்களை ஏற்படுத்திவிடுகின்றன.  அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகிறது, அமைதியாக சென்றுகொண்டிருந்த நபரை யானை ஒன்று வேகமாக தள்ளிவிடும் காட்சி பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க | டெலிவரி பாயை வலை வீசி தேடும் ‘ஸ்விக்கி’ : தகவல் கொடுத்தால் ரூ. 5,000 பரிசு!

இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் இணையத்தில் பரவி விரைவில் கவன ஈர்ப்பை பெற்றுவிடும்.  அந்த வகையில் இப்போது இணையத்தில் பரவியுள்ள இந்த வீடியோவும் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.  சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில் ஒரு பெரிய யானை ஒன்று நெற்றியில் பெரிய பட்டையுடன் நின்றுகொண்டு இருக்கிறது, அதனருகில் கீழே பாகனும் அமர்ந்து இருக்கிறார்.  அப்போது அந்த வழியாக ஒரு நபர் நடந்து வருகிறார், அவர் அமைதியாக யானையை கடந்து முன்னே செல்கிறார், அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் அந்த யானை உடனே தனது தும்பிக்கையால் அவரை ஒரே சுழட்டில் பின்பக்கமாக தூக்கி வீசுகிறது.

யானையின் வீசிய வேகத்தில் அந்த நபர் தரையில் நிலைகுலைந்து கிடக்கிறார், உடனே யானை பாகன் வேகமாக சென்று அந்த நபருக்கு உதவி செய்ய முயற்சிப்பதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.  இந்த காட்சி பார்க்கும்போது கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, இந்த வீடியோவை ஏராளமான இணையவாசிகள் பார்த்ததோடு, லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | நிம்மதியா தூங்க விட்றானா பாரு...நாயிடம் உரண்டை இழுக்கும் பூனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More