Home> Social
Advertisement

Durgamati: பாகமதி ரீமேக்கில் அனுஷ்கா ஷெட்டியின் வேடத்தில் பூமி பெட்னேகர்

பாகமதி ரீமேக்கில் அனுஷ்கா ஷெட்டியின் வேடத்தில் பூமி பெட்னேகர் நடிக்கும் துர்கமதி திரைப்பட  ட்ரெய்லர் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் படத்தின் மோஷன் போஸ்டரை (motion poster) கைவிட்டுவிட்டனர்.

Durgamati: பாகமதி ரீமேக்கில் அனுஷ்கா ஷெட்டியின் வேடத்தில் பூமி பெட்னேகர்

Durgamati:  பாகமதி ரீமேக்கில் அனுஷ்கா ஷெட்டியின் வேடத்தில் பூமி பெட்னேகர் நடிக்கும் துர்கமதி திரைப்பட  ட்ரெய்லர் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் படத்தின் மோஷன் போஸ்டரை (motion poster) கைவிட்டுவிட்டனர்.

துர்கமதி திரைப்படம், மிகவும் வித்தியாசமான மற்றும் புதிரான பின்னணியைக் கொண்ட படம். தெலுங்கு மொழியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட பாகமதி திரைப்படத்தின் ரீமேக் துர்கமதி ஆகும். பாகமதி என்றாலே அனுஷ்கா ஷெட்டியின் முகம் நினைவுக்கு வரும் அளவுக்கு அவர் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். தற்போது, அனுஷ்கா ஷெட்டியின் நடிப்புடன் போட்டி போட்டு நடிக்கும் பூமி பெட்னேகரின் நடிப்பு அனுஷ்கா ஷெட்டியின் (Anushka) நடிப்புடன் ஒப்பிடப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.   

அக்‌ஷய் குமார் வழங்கும் துர்காமதி திரைப்படத்தை அசோக் இயக்கியுள்ளார். அபுண்டாண்டியா என்டர்டெயின்மென்ட்டின் விக்ரம் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். அர்ஷ்வத் வார்சி மற்றும் கரண் கபாடியா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 11ஆம் தேதி அன்று ஓடிடியில் (OTT) நேரடியாக வெளியாகிறது.

முன்னர் இந்த திரைப்படத்தின் தலைப்பு ‘துர்காவதி’ என்று வைக்கப்பட்டிருந்தது. தற்போது, ‘துர்காமதி: தி மித்’ ('Durgamati; the myth) என்று திரைப்படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். ஏற்கெனவே வெளியான போஸ்டர்களில் இருந்த துர்காவதி என்ற பெயர் ‘துர்காமதி’ என்று மாற்றப்பட்டது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், தலைப்பு மாற்றம் குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Read Also | Mahesh Babuவின் GAP hoodieயின் விலையை உங்களால் யூகிக்க முடியுமா? 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More