Home> Social
Advertisement

கூகுள் டூடுல் இருப்பவர் யார் தெரியுமா?

இன்று இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரான ஹோமை வியாரவல்லா பிறந்த தினத்தை கொண்டாடியது கூகுள் டூடுல்.   

கூகுள் டூடுல் இருப்பவர் யார் தெரியுமா?

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஹோமை வியாரவல்லா. குஜராத்தில் சூரத் அருகே நவ்சாரி பகுதியில் ஒரு பார்சி குடும்பத்திற்கு 1913 டிசம்பர் 9-ம் தேதி பிறந்தார். இவர் 1930-ல் தனது புகைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். துவக்கத்தில் அவரது புகைபடங்கள் அவர் கணவரின் பெயரில் வெளியிடப்பட்டன.

1942ம் வருடம் டெல்லிக்கு குடி பெயர்ந்த இவர் பிரிட்டிஷ் இன்ஃபர்மேஷன் சர்வீசஸில் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் இந்திய சுதந்திரத்தின் முக்கிய நிகழ்வுகளை ஹோமை படம் பிடித்துள்ளார். காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பல இந்தியத் தலைவர்களின் புகைப்படங்களை எடுத்தபின்னர் தான் அவரது பணி அங்கீகரிக்கப்பட்டது.

அவரது புகைப்படங்கள் பெரும்பாலானவை "தல்டா" என்ற புனைப்பெயரின் கீழ் வெளியிடப்பட்டன. இந்த பெயரின் காரணம், அவர் 1913-ம் ஆண்டு பிறந்தார், 13 வயதில் தன் கணவனை சந்தித்தார். அவரது முதல் காரின் எண் "DLD 13". இந்திய அரசு 2011-ம் ஆண்டு அவருக்கு பத்ம விபூஷன் விருது அளித்து சிறப்பித்தது. 

அவரது 104 வது பிறந்த நாளை கூகுள் தனது டூடுல் வைத்து கொண்டாடியது.

Read More