Home> Social
Advertisement

முதலை வடிவில் ராட்சத உடும்பு, அலறியடித்து ஓடிய மான்: வீடியோ வைரல்

இதில், ஒரு மாபெரும் ராட்சத உடும்பு மானின் அருகில் வந்து அதை விழுங்க முயற்சிப்பது நாம் பார்க்கலாம்.

முதலை வடிவில் ராட்சத உடும்பு, அலறியடித்து ஓடிய மான்: வீடியோ வைரல்

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இதில் ஆற்றங்கரையில் ஒரு மான் இருப்பதையும், பெரிய ராட்சத உடும்பு இருப்பதையும் இந்த வீடியோவில் காணலாம். அங்கிருந்ததைப் பார்த்துவிட்டு, அந்த மானை வேட்டையாடும் நோக்கத்தில் அந்த உடும்பு ஓடத் தொடங்கியது. ஃப்ரேமில் அடுத்து நடந்ததைப் நீங்கள் பார்த்தால் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 

ராட்சத உடும்பு தாக்குதல்
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திடீரென அருகில் இருக்கும் ராட்சத உடும்பைக் கண்டு மான் பயந்து நதியை நோக்கி ஓடுவதைக் காணலாம். பின்னர் அந்த மான் பயந்து தண்ணீருக்குள் நுழைகிறது, ஆனால் உடும்பு அதை பின்தொடர்கிறது.

வீடியோவை இங்கே பார்க்கவும்

 Wildlife_stories_ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கில் உடும்பு தொடர்பான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. உடும்பு மானை முழுமையாக கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அவை பல்லிகளைப் போல தோற்றமளிக்கின்றன, ஆனால் அவற்றின் சைஸ் மிகப்பெரியது.

மேலும் படிக்க | கரும்பு லாரியா? ஒரு டோக்கன் போட்டுட்டு போ..! யானையின் குறும்பு வீடியோ வைரல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More