Home> Social
Advertisement

‘ஹெல்லோ.. நான் இங்க இருக்கேன்’: குரங்கை மிஞ்சிய உடும்பு, செம கியூட் வைரல் வீடியோ

Funny Animal Video: ‘அட, இது நல்லா இருக்கே!!!’ என ஒரு வீடியோ பல இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது. இதில் வரும் உடும்பு காட்டும் வேடிக்கை மிக கியூட்டாக உள்ளது.  

‘ஹெல்லோ.. நான் இங்க இருக்கேன்’: குரங்கை மிஞ்சிய உடும்பு, செம கியூட் வைரல் வீடியோ

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் அப்படியே மனிதர்களை போல் செய்து பல வித்தைகளை காட்டும் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் நாம் அதிகம் பார்த்துள்ளோம். மிருகங்களில் குரங்குகள்தான் மனிதர்களை நகலெடுக்கும் ஆற்றல் உடையவை என நம்பப்படுகின்றது. மனிதன் குரங்குகளின் பரிமாண வளர்ச்சி என்பதும் இதற்கு ஒரு காரணமாகும். ஆனால், மனிதர்களை அப்படியே காப்பி அடிக்கும் இன்னும் சில விலங்குகளும் உள்ளன. 

உடும்பு என்ற பல்லி வகை உயிரினங்களை நாம் அனைவரும் பார்த்திருப்போம். செல்ல மிருகங்களாக வளர்க்கப்படும் மிருகங்களில் இவை மிக பிரபலமாகும். இவற்றை செல்ல பிராணிகளாக வைத்துக்கொண்டால், அவற்றை பராமரிக்க அதிக நேரமும், முதலீடும் தேவை என கூறப்படுகின்றது. 

மேலும் படிக்க | Lion Hunt Video: சிங்கங்களின் இரையாக மாறிய காட்டெருமை வீடியோ வைரல்

முதலாளியுடன் விளையாடும் உடும்பு:

உடும்புக்கும் அதன் மனிதப் பெற்றோருக்கும் இடையே உள்ள நல்ல பிணைப்பைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. ஒரு நபர் தன் செல்ல பிராணியான உடும்பை பார்த்து கை அசைக்க, அந்த உடும்பும், தனது உரிமையாளரை பார்த்து அவர் கை அசைத்தது போலவே, கை அசைக்கிறது. இது பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக உள்ளது. 

உடும்பும் அதன் முதலாளியும் பகிர்ந்துகொள்ளும் பாசப்பிணைப்பை இந்த வீடியோவில் காணலாம்: 

உடும்புகளை நாம் வளர்த்தால், அவற்றுடன் நல்ல பிணைப்பை ஏற்ப்டுத்திக் கொள்ளவும், அவற்றுக்கு நம்பிக்கை அளிக்கவும், அவற்றை அவ்வப்போது கையில் எடுத்து பாசமாக தடவிக்கொடுக்க வேண்டும் என கூறப்படுகின்றது. உடும்புகளை மிகவும் கனிவாகவும், கவனமாகவும், எச்சரிக்கையுடனும்  பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த வீடியோ ட்விட்டரில் CCTV_IDIOTS என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட போதை ஆசாமி...! அப்புறம் என்ன நடந்துச்சு நீங்களே பாருங்க: video

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More