Home> Social
Advertisement

’சார் எங்கள போட்டோ எடுங்க’ கேமராவுக்கு போஸ் கொடுக்கும் 2 நாகப்பாம்புகள் - வைரல் வீடியோ

நாகப்பாம்புகள் இரண்டு ஜோடியாக கேமராவுக்கு போஸ் கொடுக்கும் அழகான காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் ரசித்துள்ளனர்.   

’சார் எங்கள போட்டோ எடுங்க’ கேமராவுக்கு போஸ் கொடுக்கும் 2 நாகப்பாம்புகள் - வைரல் வீடியோ

விலங்குகளும் டெக்னாலஜி மாற்றத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அவையும் செல்போன் உபயோகிப்பது முதல் கேமராவுக்கு போஸ் கொடுப்பது வரை கற்றுக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பான வீடியோக்களை நீங்கள் ஏராளமாக சமூக ஊடகங்களில் பார்க்கலாம்.  குரங்குள் மொபைகளில் கேம் விளையாடும். நாய்க்குட்டிகள் தொலைக்காட்சி பார்க்கும். இன்னும் சில விலங்குகளும் வியப்பான விஷயங்களை செய்வதை பார்க்க முடியும். அந்தவகையில் நாங்களும் இருக்கிறோம் என்பதை பாம்புகளும் லைம் லைட்டுக்கு வந்திருக்கின்றன. நாங்களும் டெக்னாலஜி உலகத்துக்கு மாறமாட்டோமா என்ன என்று கேட்கும் வகையில், போட்டோவுக்கு இரண்டு நாகப்பாம்புகள் ஜாலியாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

\மேலும் படிக்க | பளார்... பாம்பை அடித்து பாடாய் படுத்திய பூனை: அரண்டு போன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

இந்த வீடியோ பீஹார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் நாகப்பாம்பு ஜோடி ஜாலியாக கேமராவுக்கு போஸ் கொடுத்து விளையாடுகின்றன. இந்த வீடியோவை அரசு அதிகாரி தீபக் குமார் சிங் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். வீடியோ பதிவில் அவர், “பாட்னா உயிரியல் பூங்காவில் குளிர்ந்த வானிலையை ரசிக்கும் இந்திய நாகப்பாம்பு ஜோடி. மிரட்டும் பாணியில் இருக்கும் இப்பாம்புகள் உலகளவில் முக்கியச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் பாம்பின வகையை சேர்ந்தவை.

இவற்றின் நளினமும், பெருமைக்குரிய தோரணையும், விஷக்கடியும் அவற்றின் மேல் அச்சத்தையும், மரியாதையையும் ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் இரண்டு நாகப்பாம்புகளும் மிரட்டலான தோரணையில் நிற்கின்றன. ஆனால், கேமராவுக்கு அழகாக போஸ் கொடுப்பது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படுவேகத்தில் பரவி வருகிறது.

மேலும் படிக்க | வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை: தட்டித்தூக்கி மரத்தில் கட்டிய பெண் வீட்டார்.. வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More