Home> Lifestyle
Advertisement

வெளியானது விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தின் மாஸ் டீசர்!

முதல் முறையாக கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் துருவ நட்சத்திரம். இதில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என டபுள் ஹீரோயின் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், வம்சி, திவ்யதர்ஷினி, மாயா, விநாயகன் ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். 

கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இயக்குனர் கவுதம் மேனன் தனது ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
 
ஏற்கெனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் இரண்டு டீசர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் ஷூட்டிங் முடிவடையும் இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று காலை இயக்குனர் கவுதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Read More