Home> Social
Advertisement

தனது ட்விட்டர் பக்கத்தில் 'Chief Minister of Tamil Nadu' என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தனது ட்விட்டர் பக்கத்தில் 'Chief Minister of Tamil Nadu' என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றினார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் 'Chief Minister of Tamil Nadu' என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுகவுக்கு மட்டும் 125 இடங்கள் கிடைத்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் மொத்தமாக உள்ளனர்.

இதற்கிடையில் தமிழக முதல் அமைச்சராக திமுக (DMK) தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஒவ்வொருவரும் உறுதிமொழியை வாசித்து அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்றைய பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார் ஆளுநர்.

ALSO READ | Live Update: தமிழகத்தின் புதிய முதல்வரானார் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஏற்கெனவே ’#ChiefMinisterMKStalin’, ’#முகஸ்டாலின்_எனும்_நான்’ போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கிடையில் தற்போது பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக  முதல் அமைச்சர் என இணைத்துக்கொண்டுள்ளார் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்.

fallbacks

இதனிடையே, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘முன்னாள் தமிழக முதல்வர்’ என மாற்றிக்கொண்டுள்ளார். 

fallbacks

அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகளின் விவரம்:-

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய ஆட்சிப் பணி, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கம் 
துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை 
கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்
பொன்முடி: உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல்
ஏ.வ.வேலு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்
செந்தில் பாலாஜி: மின்சாரத்துறை
மா.சுப்பிரமணியன்: சுகாதாரத்துறை
ஐ.பெரியசாமி: கூட்டுறவுத்துறை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி: பள்ளிக் கல்வித்துறை
தங்கம் தென்னரசு: தொழில்துறை
KKSSR ராமச்சந்திரன்: வருவாய்த்துறை
டி.எம்.அன்பரசன்: ஊரக தொழில் துறை
எம்.பி.சமிநாதன்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளம்பரத்துறை
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்: சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை
எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன்: போக்குவரத்துத் துறை
கே.ராமசந்திரன் - வனத்துறை
சக்கரபாணி - உணவு மற்றும் பொது விநியோகத் துறை
செந்தில்பாலாஜி - மின்சாரத்துறை
ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் நெசவுத் துறை
ம.சுப்ரமணியன் - சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை
பி.மூர்த்தி - வணிக வரி மற்றும் வரிகள் மற்றும் பதிவுத்துறை
எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
பி.கே.சேகர்பாபு - இந்து சமய நலத்துறை
பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை
எஸ்.எம்.நாசர் - பல்வளத்துறை
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மை நலத்துறை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வி துறை
வி.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், மற்றும் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாடு வளர்ச்சித்துறை
சி.வி.கணேசன் - தொழிலாளர் மற்றும் ஸ்கில் மேம்பாடு துறை
மனோ தங்கராஜ் - தொழில்நுட்பத் துறை
மதிவேந்தன் - சுற்றுலாத்துறை
கயல்விழி - ஆதிதிராட நலத்துறை

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More