Home> Social
Advertisement

58 நிமிடங்களில் 46 உணவு வகைகளை சமைத்து சென்னை சிறுமி சாதனை

உலக சாதனையை உருவாக்கியுள்ள எஸ்.என்.லட்சுமி சாய் ஸ்ரீ, தானாகவே சமையலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதாகவும், குறிப்பாக COVID-19 லாக்டௌனின் போது தனது தாயால் பயிற்சியளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

58 நிமிடங்களில் 46 உணவு வகைகளை சமைத்து சென்னை சிறுமி சாதனை

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை 58 நிமிடங்களில் 46 உணவுகளை சமைத்து தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் யுனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

உலக சாதனையை உருவாக்கியுள்ள எஸ்.என்.லட்சுமி சாய் ஸ்ரீ, தானாகவே சமையலில் (Cooking) ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதாகவும், குறிப்பாக COVID-19 லாக்டௌனின் போது தனது தாயால் பயிற்சியளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

"நான் என் தாயிடமிருந்து சமையல் கற்றுக்கொண்டேன். இந்த மைல்கல்லை நான் அடைந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் ANI இடம் கூறினார்.

fallbacks

லக்ஷ்மியின் தாயார் என்.கலைமகள், தனது மகள் லாக்டௌன் (Lockdown) காலத்தில் சமைக்கத் தொடங்கினார் என்றும், அவர் நன்றாகச் சமைத்ததாகவும் கூறினார். சமையல் மீது லக்ஷ்மிக்கு அதிக ஆர்வம் இருந்ததால், லட்சுமியின் தந்தை உலக சாதனையை உருவாக்க முயற்சிக்குமாறு பரிந்துரைத்தார்.

fallbacks

ALSO READ: 1 hour-க்குள் 33 dishes செய்து 10 வயது கேரளப் பெண் செய்த சுவையான சாதனை!!

"நான் தமிழ்நாட்டின் (Tamil Nadu) வெவ்வேறு பாரம்பரிய உணவு வகைகளை சமைக்கிறேன். லாக்டௌனின் போது, ​​என் மகள் என்னுடன் சமையலறையில் நேரத்தை செலவழித்தாள். என் மகளுக்கு சமைப்பதில் உள்ள ஆர்வத்தைப் பற்றி நான் பேசியபோது, ​​அவர், சமையல் செயல்பாட்டிற்கான உலக சாதனைக்கு (World Record) லக்ஷ்மி முயற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். இப்படித்தான் இந்த யோசனை எங்களுக்கு வந்தது" என்று அவர் கூறினார்.

 

 

லட்சுமியின் தந்தை இது குறித்து தகவல் சேகரிக்கத் துவங்கியபோது, ​​கேரளாவைச் சேர்ந்த சான்வி என்ற 10 வயது சிறுமி சுமார் 30 உணவுகளை சமைத்ததைப் பற்றி அறிந்தார். "ஆகையால், தனது மகள் சான்வியின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்," என்று லட்சுமியின் தாய் மேலும் கூறினார்.

ALSO READ: Watch Video: 144 தளங்களைக் கொண்ட கட்டிடம் 10 விநாடிகளில் தகர்க்கப்பட்டு கின்னஸ் சாதனை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More