Home> Social
Advertisement

WhatsApp புதிய தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசு

பிப்ரவரி 2 ம் தேதி நடைபெற்ற விசாரணையில், வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக நீதிமன்றம் மத்திய அரசிடம் பதில் கோரிய நிலையில், மத்திய அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது

WhatsApp புதிய தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசு

புதுடெல்லி: வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்துவதை தடை செய்யுமாறு தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு (Central Government) கோரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப்பின் (WhatsApp) புதிய தனியுரிமை கொள்கை  (WhatsApp New Privacy Policy) காரணமாக, பொது மக்கள் தரவு தவறாகப் பயன்படுத்தும் ஆபத்து அதிகரிக்கும் என்று அரசு கூறியது.

முன்னதாக, பிப்ரவரி 2 ம் தேதி நடைபெற்ற விசாரணையில், வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை (Whatsapp New Privacy Policy) எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக நீதிமன்றம் மத்திய அரசிடம் (Central Government) பதில் கோரிய நிலையில், மத்திய அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது

பேஸ்புக் உடன் தரவைப் பகிர்ந்து கொள்ள, பயனர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், பிப்ரவரி 8 க்குப் பிறகு  அவர்களால் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது எனக் கூறியது. இருப்பினும், பயனர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்தக் தனியுரிமை கொள்கை அமல்படுத்துவதை மே 15 வரை ஒத்தி வைத்தது.

வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை ஜனவரி 5 அன்று அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து வாட்ஸ்அப் பயனர்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஏராளமான மக்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர். மேலும், வாட்ஸ்அப் புதிய தனியுரிமைக் கொள்கை தொடர்பாக இந்திய குடிமக்களின் தனியுரிமைக்கான உரிமையை மீறியதாக வாட்ஸ்அப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் புதிய கொள்கையை 'Agree or leave' கொள்கையின் கீழ் பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துகிறது. நுகர்வோருக்கு மறுக்க வாய்ப்பில்லை. 

ALSO READ |WhatsApp-ற்கு குட்டு வைத்த நீதிமன்றம்; மிகப்பெரிய நிறுவனமாக இருக்கலாம்.. ஆனால்....!! 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More