Home> Social
Advertisement

கார்ட்டூனை பார்த்து விளையாடும் பூனைக்குட்டி! இணையத்தை கலக்கும் வீடியோ!

பூனைக்குட்டி ஒன்று தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும்  கார்ட்டூனை பார்த்து அதேபோல நீச்சலடிக்க முயலும் காட்சி பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.  

கார்ட்டூனை பார்த்து விளையாடும் பூனைக்குட்டி! இணையத்தை கலக்கும் வீடியோ!

இணையத்தில் குவிந்து கிடக்கும் பூனைகளின் வீடியோக்கள் நம் மனதை கவரக்கூடிய ஆற்றல் படைத்ததாக இருக்கின்றன.  சில பூனைகளும் மனிதர்களை போலவே சில செயல்களை செய்யும்போது அது நம்மை வியக்கவைக்கின்றன.  நமக்கு தெரிந்தவரை குழந்தைகள் தான் கார்ட்டூன்களை விரும்பி பார்த்து அதில் வரும் கதாபாத்திரங்களை போலவே செயல்களை செய்யும், ஆனால் இங்கு ஒரு பூனையோ கார்ட்டூனை பார்த்து அதில் வருவது போன்றே செய்கிறது.  மோனா என்கிற கார்ட்டூன் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்கள் மத்தியிலும் பிரபலமான ஒன்று, அதில் அந்த குட்டிப்பொண்ணுக்கு கடல் தாயாக மாறி அரவணைக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும்.  மோனாவின் குறும்புத்தனங்கள், கார்டூனில் வரும் வண்ணமயமான காட்சிகள் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த கார்ட்டூன் குழந்தைகளை மட்டுமல்ல பூனைகளை கவர்ந்திருப்பது இங்கு வைரலாகி வரும் வீடியோவின் மூலம் தெரிகிறது.  இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வீடியோவில் ஒரு தொலைக்காட்சியில் மோனா கார்ட்டூன் ஓடிக்கொண்டிருக்கிறது.  அதில் கடலுக்குள் குட்டி மோனா செல்லும் காட்சி வரும்பொழுது, அதனை தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்த பூனை தானும் நீச்சலடிக்க தொடங்குகிறது.  அதில் மோனா எப்படி கை அசைக்கிறதோ அதேபோல அந்த பூனையும் கைகளை ஆட்டிக்கொண்டு மெத்தையில் அமர்ந்துகொண்டு நீச்சல் அடிப்பது போல செய்து கொண்டிருக்கிறது.  

 

மேலும் படிக்க | சுறாமீனை வெறும் கைகளால் பிடித்த நபர்! அதிர்ச்சியூட்டும் வீடியோ!

இந்த காட்சி பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்து இருக்கிறது.  இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை எம்பத்தி ஒன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் கண்டு ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கமெண்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | டேய் நீ போடா..! நாடோடிகள் பட பாணியில் எட்டி பார்க்கும் பூனைக்குட்டிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More