Home> Social
Advertisement

திருட்டுத்தனமாக வீட்டை விட்டு வெளியேறும் பூனையின் க்யூட் வீடியோ!

பூனை ஒன்று யாருக்கும் தெரியாமல் வீட்டின் ஜன்னல் கதவை திறந்துகொண்டு வெளியேறும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.  

திருட்டுத்தனமாக வீட்டை விட்டு வெளியேறும் பூனையின் க்யூட் வீடியோ!

பொதுவாகவே வீட்டு விலங்காக இருந்தாலும் சரி, காடுகளில் வாழும் விலங்காக இருந்தாலும் சரி, அவற்றிற்கு ஒரே இடத்தில் அடைத்து வைப்பது பிடிக்காத ஒன்று. விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் ஒரு இடத்திலேயே அடைபட்டு கொண்டிருப்பது பிடிக்காத ஒன்று.  இங்கு ஒரு வீடியோவில் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பூனை ஒன்று மெதுவாக ஜன்னல் கதவை திறந்துகொண்டு வெளியேறும் காட்சி இணையத்தில் பரவியுள்ளது, இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் ரசித்து வருகின்றனர்.  மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்டு வீட்டில் வளர்க்கப்படும் இதுபோன்ற பூனைகள் பல, ரசிக்கும்படியான சில விஷயங்களை செய்து பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

fallbacks

மேலும் படிக்க | தூங்குபவரின் மீது ஏறிய 2 மலைப்பாம்புகள் - அதிர்ச்சி வீடியோ 

ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் பூனை ஒன்று வீட்டிற்குள் இருக்கிறது, அந்த பூனை கைப்பிடி ஒன்றை பிடித்துக்கொண்டு ஏதோ செய்வது போன்று முதலில் தோன்றுகிறது.  இதனை முழுமையாக பார்த்த பின்னர் தான் தெரிகிறது அந்த பூனை வீட்டை விட்டு வெளியேற தான் அந்த கதவின் கைப்பிடியொடு போராடியது என்று.  பூனை முயற்சி செய்து ஒரு வழியாக ஜன்னல் கதவின் கைப்பிடியை பிடித்து ஜன்னலை திறந்துவிட்டு வெளியே செல்கிறது.  

 

இந்த வீடியோவுடன் கேப்ஷனாக 'நான் வெளியே செல்கிறேன், சிறிது நேரம் கழித்து திரும்பி வருகிறேன்' என்று பதிவிடப்பட்டுள்ளது.  சில நிமிடங்களே உள்ள இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றியதும் பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு அதிகமான லைக்குகளும், கமெண்டுகளை குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க | இவருக்கு வந்த சோதனைய பாருங்க: காண்டான கங்காரு, வைரலான வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More