Home> Social
Advertisement

Viral Video: அம்பை போல பாயும் சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான முதலை!

நீரிலும் நிலத்திலும் திறமையாக வேட்டையாடும் திறன் பெற்றது முதலை. அதே நேரத்தில், சிறுத்தைகளும் மிகவும் ஆபத்தான விலங்கு. முதலையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 

Viral Video: அம்பை போல பாயும் சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான முதலை!

இணைய உலகில் பகிரப்படும் வன விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகி விடும். தற்போது முதலை மற்றும் சிறுத்தை இடையேயான போராட்ட்டம் குறித்த ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. முதலைகள் தண்ணீரில் மிகவும் ஆபத்தான உயிரினங்களாக கருதப்படும் முதலையை அதன் கோட்டைக்கே சென்று சிறுத்தை வீழ்த்திய வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. நீரிலும் நிலத்திலும் திறமையாக வேட்டையாடும் திறன் பெற்றது முதலை. அதே நேரத்தில், சிறுத்தைகளும் மிகவும் ஆபத்தான விலங்கு. முதலையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது போன்ற ஒரு காட்சியை சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளியில் காணப்படுகிறது.

காட்டில் இரை தேடி வரும் சிறுத்தை மரத்தின் மீதேறி வருவதை வைரலாகி வரும் இந்த வீடியோவில் பார்க்கலாம். அங்கு கீழே ஓடும் நதியில் ஒரு முதலை தண்ணீரில் நீந்திக் கொண்டிருக்கிறது போலும். சிறுத்தை நொடிப் பொழுதில் ஆற்றில் அம்பை போல பாய்ந்து, தண்ணீருக்குள் நுழைந்து முதலையைப் பிடிக்கிறது. இந்த நேரத்தில் முதலை தப்பிக்க வழியில்லாமல் சிறுத்தையிடம் சிக்கிக் கொள்கிறது. பின்னர் சிறுத்தை அதனை காட்டிற்குள் இழுத்துச் செல்கிறது.

வைரலாகி வரும் வீடியோவை கீழே காணலாம்:

 

 
 
 

 

 

 

 

 

 
 
 
 
 
 
 
 

 

 

 

 

A post shared by Wildlifeanimall (@wildlifeanimall)

 

அந்த வீடியோவில், சிறுத்தை முதலையுடன் காட்டை நோக்கி செல்லும் விதத்தை பார்த்தால், முதலை உயிருடன் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த வீடியோ wildlifeanimall என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது என்பதை அது பெறும் வ்யூஸ்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | Viral Video: இது என்னடா சோதனை... தண்ணீர் குடிக்க போராடும் குட்டி யானை

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More