Home> Social
Advertisement

‘அப்படியே ஷாக் ஆய்ட்டேன்’: தாக்க வந்து, பல்பு வாங்கி ஓடியே போன கரடி, வைரல் வீடியோ

Funny Bear Video: ஒரு நிமிடம் அச்சம், அடுத்த நிமிடம் சிரிப்பு!! இணையத்தில் வைரலாகும் ஒரு கரடி வீடியோ இப்படித்தான் உள்ளது!!

‘அப்படியே ஷாக் ஆய்ட்டேன்’: தாக்க வந்து, பல்பு வாங்கி ஓடியே போன கரடி, வைரல் வீடியோ

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

காட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் பல வித்தியாசமான பாணிகளை நாம் காண்கிறோம். மேலும் சில காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு திருப்தி கிடைக்காமல் மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் இருக்கின்றன. பெரும்பாலும் பாம்பு, சிங்கம், யானை, குரங்கு தொடர்பான வீடியோக்களே அதிகம் காணப்படுகின்றன. 
தற்போது கரடியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அதன் மிக வித்தியாசமான பாணி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும், கரடியின் நடவடிக்கைகள் மிக வேடிக்கையாகவும் இருக்கின்றன. 

மேலுப் படிக்க | வைரல் வீடியோ: கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு...உயிரை காப்பாற்றுமாறு கெஞ்சிய நபர் 

காட்டில் ஒரு காரை காணும் கரடி, அதை தாக்கும் நோக்குடன் அதன் அருகில் செல்வதை வீடியோவில் காண முடிகின்றது. ஆனால், அதற்கு பிறகு நடக்கும் விஷயத்தை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. 

தாக்க வந்த கரடி

வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் கார் ஒன்று காணப்படுவதையும், அதில் சில சுற்றுலா பயணிகள் இருப்பதையும் காண முடிகின்றது. அங்குள்ள வனப்பகுதியில் இருந்து திடீரென கரடி ஒன்று வந்து அந்த காரை தாக்க முயல்கிறது. கரடியின் நோக்கத்தை புரிந்துகொண்ட சுற்றுலாப் பயணிகள் வித்தியாசமான உத்தியைக் கடைப்பிடித்து உடனடியாக சைரன் போல ஒலி எழுப்பி சத்தமாக கத்தத் தொடங்குகின்றனர். சத்தம் கேட்ட கரடி அடுத்த நொடியே காட்டுக்குள் ஓடி விடுகிறது. 

தாக்குதல் நடத்த வந்த கரடி திடீரென இப்படி ஒரு பெரிய சத்தத்தை கேட்டவுடன் அப்படியே ஷாக் ஆகி விடுகின்றது. சத்தம் கேட்டு அது இரு கால்களில் நிற்கிறது. அது சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து விடுகிறது. பின், நமக்கு எதற்கு வம்பு என் ஓடிப்போய்விடுகிறது.

கரடியின் வித்தியாசமான வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

predator_wildlifevids)

கரடியின் இந்த வேடிக்கையான வீடியோ ppredator_wildlifevids என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | Viral Video: வகுப்பறையில் இப்படியா..வைரலாகும் மாணவ - மாணவியின் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Read More