Home> Social
Advertisement

சேட்ட பண்ணுவியா? அம்மாவின் ஒரே அடியில் பம்மிய பூனைக்குட்டி!

வேகமாக சீறிக்கொண்டு பாய்ந்து வரும் பூனைக்குட்டி ஒன்று எதிரே தனது தாய் பூனையை கண்டதும் பயந்துகொண்டு தரையில் படுத்துக்கொள்ளும் நகைச்சுவையான காட்சி வைரலாகி வருகிறது.  

சேட்ட பண்ணுவியா? அம்மாவின் ஒரே அடியில் பம்மிய பூனைக்குட்டி!

சிலர் பொதுவெளியில் புலியாகவும், வீட்டிற்குள் எலியாகவும் இருப்பார்கள். சிலரோ பொதுவெளியில் எலியாகவும் வீட்டிற்குள் புலியாகவும் இருப்பார்கள்.  இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொண்டிருப்பார்கள், அதேசமயம் ஒருவர் எவ்வளவு தான் பெரிய ரவுடியாக இருந்தாலும் வீட்டில் அவரது தாய்க்கு கொஞ்சம் பயந்து தான் போவார்கள்.  இது விலங்குகளுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா, நாம் அன்றாடம் பார்க்கும், வீடுகளில் வளர்க்கும் விலங்கினங்களும் பல செயல்களில் மனிதர்களை ஒத்த பண்புடையதாக தான் இருக்கின்றன.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் பூனைக்குட்டி, அதன் தாய் பூனையை பார்த்து அஞ்சி நடுங்கும் காட்சி தான் பலரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

இந்த நகைச்சுவையான வீடியோவானது சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ட்விட்டரில், யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் வெள்ளை மற்றும் கருப்பு நிறம் பூனைக்குட்டி ஒன்று போருக்கு செல்வது போல வேகமாக சீறிக்கொண்டு கட்டவிழ்த்த காளை போல பாய்ந்து வருகிறது, அப்போது தான் அங்கு சடன் பிரேக் போட்டது போல ஒரு ட்விஸ்ட் நடக்கிறது.  அதாவது சீறிப்பாய்ந்து வந்த பூனைக்குட்டியின் வழியில் திடீரேன்று அதன் தாய் பெரிய பூனை குறுக்கிட்டு அதனை தடுக்கிறது.  பூனைக்குட்டியை தடுத்தது மட்டுமல்லாமல் அந்த பெரிய பூனை, அதன் குட்டிக்கு ஒரு ஆதி போடுகிறது, உடனே அந்த பூனைக்குட்டி பொசுக்கென்று தரையில் மல்லாக்க படுத்து கொள்கிறது.  பின்னர் அந்த பெரிய பூனை சிறிது நேரம் பூனைக்குட்டியை பார்த்துக்கொண்டே நிற்கிறது. 

 

அந்த பூனைக்குட்டியோ அசையாமல் அப்படியே படுத்துக்கொண்டு இருக்கிறது.  அதனைத்தொடர்ந்து அந்த பெரிய பூனை அந்த இடத்தை  நகர்ந்ததும், பூனைக்குட்டி மெதுவாக எழ முயற்சிப்பதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.  இணையத்தில் கடந்த 18ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவானது இதுவரை பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.  மேலும் இந்த வீடியோவிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல நகைச்சுவையான கமெண்டுகளும் பதிவிடப்பட்டு வருகிறது.  மேலும் இந்த வீடியோவுடன் 'ஐ சரண்டர்' என்கிற கேப்ஷனும் பதிவிடப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More