Home> Social
Advertisement

டைனாசரிடம் மாட்டிய தந்தையின் தலை: அழுத குழந்தையில் ரியாக்‌ஷன், சான்சே இல்ல..வைரல் வீடியோ

Funny Viral Video: தந்தை செய்வது விளையாட்டு என தெரியாமல் தந்தைக்காக சிறுவன் படும் பாடு, நம்மை சிரிக்க வைத்தாலும், சிறுவன் மீது பாசத்தை ஏற்படுத்துகின்றது. 

டைனாசரிடம் மாட்டிய தந்தையின் தலை: அழுத குழந்தையில் ரியாக்‌ஷன், சான்சே இல்ல..வைரல் வீடியோ

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. குழந்தைகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சிறு குழந்தைகளின் வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலம் ஆகின்றன. குழந்தைகளின் அப்பாவித்தனம் மற்றும் கள்ளம் கபடமற்ற குணம் அனைவரையும் கவர்வது இயல்பே. குழந்தை பருவத்தில், அவர்களுக்கு அனைத்துமே அவர்களது பெற்றோர்கள் தான். எந்த ஒரு சந்தர்பத்திலும் குழந்தைகள் தங்கள் பெற்றோரை விட்டு விலகிச்செல்ல விரும்புவதில்லை. அவர்களின் பிரிவை சிறிது நேரத்திற்கு கூட குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால், தன் தாய் மற்ற குழந்தையை கொஞ்சுவதை கூட சில குழந்தைகளால் பொறுத்துக்கொள்ள முடியாது. 

குழந்தைகள் தங்கள் பெற்றோரை நேசிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் மீது அளவு கடந்த அக்கறையையும் காட்டுகிறார்கள். தங்கள் பெற்றோரை யாரேனும் ஏதாவது கூறினால் அவர்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது. அதேபோல, அவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றாலும், குழந்தைகளின் மனம் பதறிவிடும்.

இதை காடும் ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு தந்தையும் மகனும் பல வித கேளிக்கை அம்சங்கள் நிறைந்திருக்கும் ஒரு பொழுதுபோக்கு இடத்திற்கு வருகிறார்கள். அங்கு விளையாட்டாக தந்தை ஒரு பொம்மை டிராகனின் வாயில் தலையை வைக்கிறார். ஆனால், தனது தந்தையின் தலை பொம்மை டிராகனின் வாயில் போவதை பார்க்கும் குழந்தை சத்தமாக அழ ஆரம்பித்து விடுகிறது. அவரைக் காப்பாற்ற முயல்கிறது. டிராகனின் வாயில் சிக்கியது போல் தந்தை நடந்து கொள்கிறார். அவர் வேதனை படுவதை பார்க்கும் அந்த சிறுவனால் அதை தடுக்க ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறுவனின் இயலாமை தெள்ளத் தெளிவாக அவரது முகபாவத்தில் தெரிகின்றது.

மேலும் படிக்க | 'ஓரமா போங்க ப்ரோ’: ஆமையிடம் பல்பு வாங்கிய முதலை.. செம காமெடி வைரல் வீடியோ

தந்தையை காப்பாற்ற அந்த சிறுவன் தனது தந்தையின் பேண்ட்டைப் பிடித்து இழுக்கத் தொடங்குகிறார். ஆனால், அப்படியும் தந்தையை விடுவிக்க முடியாதபோது மேலும் அழத் தொடங்குகிறார். குட்டி சிறுவனின் அப்பாவித்தனத்தையும், தன் தந்தை மீது அவர் வைத்திருக்கும் பாசத்தையும் பார்த்து சமூக வலைதளவாசிகளின் உள்ளத்திலும் அன்பும் பாசமும் மலர்ந்துள்ளது.

குழந்தையின் பாசப்போராட்டத்தைக் காட்டும் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@michie7299)

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் michie7299 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘அப்பாவி குழந்தைக்கு இது விளையாட்டு என புரியவில்லை.. உண்மை என நினைத்து வேதனைப்படுகிறது’ என ஒரு பயனர் குழந்தைக்காக பரிந்து பேசியுள்ளார்.  'குழந்தைகளுக்கு முன் இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்.. இது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார். ‘எத்தனை பாசமான குழந்தை.. இவன் இப்படியே வளர வேண்டும்’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: தில்லான ஆசாமி தான்... ஆக்டோபஸிடம் சிக்கியும் அஞ்சாத நபர்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More