Home> Social
Advertisement

அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீ-மேக்கில் இவர்தானா ஹீரோ?

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".

தற்போது இப்படத்தின் ரீ-மேக்கில் பாலா இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழை தொடர்ந்து அர்ஜூன் ரெட்டி படம் ஹிந்தியிலும் ரீ-மேக்காக உள்ளது. இயக்குநர் சந்தீப் வங்கா இதற்கான ரீ-மேக் உரிமையை பெற்றுள்ளார். முதலில் இப்படத்தில் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்க எண்ணி அவரை அணுகினார். ஆனால் அவர் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட இப்போது ஷாகித் கபூரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஷாகித்திற்கு கதை பிடித்து போய் இருந்தாலும், இன்னும் அவர் முழு சம்மதம் சொல்லவில்லை. விரைவில் அதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Read More