Home> Social
Advertisement

Annaatthe negative reviews: அண்ணாத்த திரைப்படத்தின் எதிர்மறை விமர்சனங்கள்

ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கான நீண்டகால எதிர்பார்ப்புகள் முடிவுக்கு வந்தன. சினிமா விமர்சகர்களின் விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தாலும், ரசிகர்களின் வரவேற்பு முதல் நாளன்று பலமாகவே இருந்தது. 

Annaatthe negative reviews: அண்ணாத்த திரைப்படத்தின் எதிர்மறை விமர்சனங்கள்

ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கான நீண்டகால எதிர்பார்ப்புகள் முடிவுக்கு வந்தன. சினிமா விமர்சகர்களின் விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தாலும், ரசிகர்களின் வரவேற்பு முதல் நாளன்று பலமாகவே இருந்தது. 

அண்ணாத்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பல சாதனைகளை ஏற்படுத்தியது. ஆனால், அண்ணாத்த திரைப்படம் இனிமேல் செய்யப்போகும் சாதனைகளுக்கு கட்டியம் சொல்வது ரசிகர்களின் விமர்சனங்கள் தான்…

சமூக ஊடகங்களில் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? பெரும்பாலான ரசிகர்கள் சிவா இயக்கத்தில் வெளியான ரஜினியின் தீபாவளி ரிலீஸ் திரைப்படத்தில் மகிழ்ச்சியடையவில்லை என்று தெரிகிறது. ட்விட்டர் எதிர்வினைகளை இங்கே பாருங்கள்.

Read Also | காட்சிகள் அமைப்பில் கோட்டைவிட்ட சிவா; அண்ணாத்த விமர்சனம்

கொரோனா தொற்றுநோய் தொடங்கிய பிறகு ரஜினிகாந்த் நடித்த முதல் படம் மீண்டும் திரைக்கு வந்திருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தைக் காண தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். படத்தின் முதல் நாள் விமர்சனங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில், சிவா இயக்கிய திரைப்படத்தை ‘ஒன் மேன் ஷோ’ என்று ட்விட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு சூப்பர் ஸ்டாரின் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான ரசிகர்களின் கூற்றுப்படி, அண்ணாத்த திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு என்றாலும், ரஜினிகாந்தின் பிரத்யேக முத்திரை இதில் இல்லை. ட்விட்டரில் ’அண்ணாத்த’ மீதான கலவையான விமர்சனங்கள் நிரம்பி வழிகிறது. 

ஒரு பயனர் எழுதினார், “#Annaatthe விமர்சனங்களைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இன்னும் பெரிய திரையில் பார்க்கவில்லை” 

மற்றொரு பயனர் எழுதினார், “#அண்ணாத்தே! இது போன்ற திரைப்படங்களை இயக்குவதை, இயக்குனர்கள் தயவு செய்து நிறுத்த வேண்டும். #ரஜினிகாந்த் சார் இது போன்ற கொடூரமான கதைக்களத்தில் நடிப்பதை நிறுத்துங்கள். இந்தப் படத்தைப் பார்க்க அவர்கள் எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்”.

விவேக் மைசூர் என்ற பெயரில் மற்றொரு ட்விட்டர் பயனர் எழுதினார், “நான் ஒரு தொலைக்காட்சி நாடகம் போன்ற ஒரு #ரஜினிகாந்த் படத்தைப் பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. ரஜினியின் படங்கள் பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் சிவா இந்தப் படத்தை ஜீரோ ஸ்டைலில் இயக்கி இருக்கிறார். #அண்ணாத்தே, லிங்காவின் வழியை பின்பற்றியிருக்கிறது”.

Also Read | தீபாவளியில் அண்ணாத்த ரஜினியின் தாண்டவம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More