Home> Social
Advertisement

கதறி அழும் காகம், குத்திக்கிழித்த கோழி: நம்ப முடியாத வைரல் வீடியோ

Scary Viral Video: இப்படி ஒரு சண்டையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. கோழிக்கும் காகத்துக்கும் நடக்கும் சண்டை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கதறி அழும் காகம், குத்திக்கிழித்த கோழி: நம்ப முடியாத வைரல் வீடியோ

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய பல ஆச்சரியமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளிவருகின்றன. சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதை ஒரு முறை பார்க்கும் பயனர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

பல இடங்களில் சேவல், கோழி சண்டைகள் இன்றும் மிக பிரபலமாக உள்ளன. வைரலாகி வரும் வீடியோவிலும் அதே போன்ற ஒன்றைதான் நாம் பார்க்கிறோம். ஆனால், இங்கு ஒரு கோழிக்கும் காகத்துக்கும் இடையில் சண்டை நடக்கின்றது. வீடியோவில், கோபமடைந்த கோழி ஒன்று காகத்தை தொடர்ந்து தாக்குவதைக் காண முடிகின்றது. காகத்தால், கோழிக்கு சமமாக சண்டையிட முடியவில்லை. அது தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள அதிக முயற்சி எடுக்க வேண்டி இருந்தது கண்கூடாகத் தெரிகிறது. 

மேலும் படிக்க | மாஸ் காட்டும் மாடு, பியூஸ் போன சிறுத்தை: ரசிக்கும் நெட்டிசன்ஸ், வைரலான வீடியோ 

காகத்துடன் சண்டையிட்ட கோழி 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை நரேந்திர சிங் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், முதலில் கோழி ஒன்று காணப்படுகிறது. இது ஒரு காகத்தைத் தொடர்ந்து தாக்குவதைக் காண முடிகின்றது. கோழி காக்கையைத் தூக்கி அடித்து, அதன் பாதங்களால் அதை அழுத்தி, அதன் மூக்கினால் குத்தி, தாக்கி காயப்படுத்துவதை வீடியோவில் காண முடிகின்றது. அதை பார்த்து அனைவரும் திகைத்து நிற்கின்றனர்.

பயனர்கள் வீடியோவை விரும்பினர்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீடியோவைப் பார்க்கும் பயனர்களால் கோழியின் சக்தியைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். இது சண்டையில் காகத்தின் மீது மிக எளிதாக ஆதிக்கம் செலுத்துகிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற காகம் கதறி அழும் காட்சி வீடியோவில் உள்ளது. அதே சமயம், கோழி தொடர்ந்து அதை குத்திக்கொண்டே இருக்கிறது. இதை நேரில் பார்த்தவர்களும் வீடியோவில் பார்த்தவர்களும் கோழியின் பலத்தைக் கண்டு அதிசயிக்கின்றனர். 

இந்த வீடியோவுக்கு இதுவரை ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | இங்க பாருடா...கதவிடுக்கில் இவ்ளோ பெரிய பாம்பு, கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More